இந்திய மக்கள் கொண்டாடும் ஐபிஎல் போட்டிகளின் 14 சீசன் அசத்தலாக துவங்கிய நிலையில், கடந்த ஆண்டை போல் அல்லாமல் இந்த ஆண்டு டிவி ஒளிபரப்பு உரிமத்தை ஹாட்ஸ்டாரும், டிஜிட்டல் ஒளிப்பரப்பு ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வயாகாம் 18-ம் கைப்பற்றியது.
இந்த நிலையில் ஐபிஎல் துவங்கிய 3 நாளில் ஜியோ சினிமா தளம் சுமார் 147 கோடி வீடியோ வியூவ்-களை பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டு முழுவதும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட ஒட்டுமொத்த வீடியோ வியூவ் எண்ணிக்கையை காட்டிலும் அதிகம் என்பது தான் மிகவும் முக்கியமான செய்தி.
இந்த ஐபிஎல் போட்டியின் மூலம் டிஜிட்டல் ஒளிபரப்பில் முக்கிய இடத்தை அடைய வேண்டும் என்பதில் குறியாய் இருந்த முகேஷ் அம்பானி தனது ஆஸ்தான அஸ்திரமான இலவசத்தை மையமாக வைத்து தற்போது புதிய சாதனையை படைத்துள்ளார்.
ஸ்ட்ரீமிங் சேவை
ஸ்ட்ரீமிங் சேவையை பொருத்த வரையில் எத்தனை பேர், எத்தனை முறை பார்த்தார்கள், அதிகப்படியாக ஒரு நொடியில் எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்பது தான் சாதனையாக பார்க்கப்படுகிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஐபிஎல் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட போது சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பைனல் போட்டிகளின் போது அதிகப்படியான மக்களுக்கு ஸ்ட்ரீம் செய்து சாதனை படைக்கும்.
ஜியோ சினிமா
ஆனால் ஜியோ சினிமா வெறும் 3 நாளில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தின் ஒரு வருட ஸ்ட்ரீம் எண்ணிக்கையை மொத்தமாக முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது. இந்த மாபெரும் சாதனைக்கு மிக முக்கியமான காரணம் இலவசம் என்ற ஒன்று தான்.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார்
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் பணம் கொடுத்து சப்ஸ்கிரைப் செய்பவர்கள் மட்டும் தான் பார்க்க முடியும், ஆனால் ஜியோ சினிமா தளத்தில் மொபைல், டிவி, டேப்லெட் அனைத்து டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் பிரிவும் முற்றிலும் இலவசம். இதை விட முக்கியமானது ஒரு வாடிக்கையாளர் ஜியோ மொபைல் நம்பர் கூட இல்லாமல் ஜியோ சினிமா தளத்தில் ஐபிஎல் போட்டிகளை பார்க்க முடியும்.
3 நாளில் சாதனை
இதன் எதிரொலியாக தான் டிஸ்னி+ ஹாட்ஸ்டார்-ன் ஒரு வருட சாதனையை வெறும் 3 நாளில் முறியடித்துள்ளது. ஐபிஎல் 16வது சீசனின் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு மத்தியில் நடந்தது. இந்த போட்டியின் போது 1.6 கோடி பார்வையாளர்களும், 2.5 கோடி ஆப் இன்ஸ்டால்களையும் ஜியோ சினிமா செயலி பெற்றுள்ளது.
ஆப் இன்ஸ்டால்
ஞாயிற்றுக்கிழமை வரையிலான காலக்கட்டத்தில் 10 கோடி வியூவர்களை பெற்றுள்ளது, இதேபோல் புதிதாக இன்ஸ்டால் செய்யப்பட்ட ஆப் இன்ஸ்டால் எண்ணிக்கை 5 கோடி ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் சராசரியாக சுமார் 57 நிமிடம் ஜியோ சினிமா தளத்தில் வாடிக்கையாளர்கள் பார்க்கின்றனர். இது கடந்த வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தை ஒப்பிடுகையில் 60 சதவீதம் அதிகமாகும்.
12 மொழி
ஜியோ சினிமா ஆங்கிலத்தில் மட்டும் அல்லாமல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் இருப்பது போலவே தமிழ், ஹிந்தி, பெங்காலி, தெலுங்கு, மலையாளம், கன்னடா ஆகிய மொழிகளில் கமெண்டரி உடன் ஸ்ட்ரீம் செய்து வருகிறது. மேலும் ஜியோ சினிமா புதிதாக போஜ்புரி, பஞ்சாபி, ஒடியா மற்றும் குஜராத்தி என மொத்தம் 12 மொழியில் ஜியோ சினிமா தளத்தில் ஸ்ட்ரீம் செய்கிறது.
விமர்சனம்
ஜியோசினிமா என்னதான் வியூவ்ஸ் மற்றும் வாடிக்கையாளர்களில் சாதனை செய்தாலும், FIFA உலக கோப்பை ஓளிபரப்பில் இருந்து பிராட்காஸ்ட் பிரச்சனை இப்போதும் உள்ளது. பல நேரம் ஸ்ட்ரக் ஆவது மட்டும் அல்லாமல் ஐபிஎல் ஒளிபரப்பில் அவுட்-க்கு பதிலாக சிக்ஸ் என காட்டுவது. அவுட் ஆன பேட்ஸ்மேன் தவறாக காட்டுவது என பல பிரச்சனைகள் இருந்தது.
இதுமட்டும் அல்லாமல் பல எழுத்து பிழைகளும் இருந்தது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications