மும்பை: இந்தியாவில் ஓடிடி தளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அமேசான், நெட்பிளிக்ஸ், ஜியோ சினிமா செயலிகள் போட்டி போட்டுக் கொண்டு சந்தா கட்டணங்களில் தள்ளுபடி, பிரத்யேகமாக படங்கள் திரையிடல் என மக்களை ஈர்க்கும் பணிகளில் இறங்கியுள்ளன. இந்நிலையில் ஜியோ சினிமா செயலி தனது சந்தா கட்டணத்தை வெகுவாக குறைத்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜியோ சினிமா ஓடிடி தளமானது தன்னுடைய ப்ரீமியம் சேவை கட்டணத்தை வெகுவாக குறைத்துள்ளது. முகேஷ் அம்பானியின் குழுமத்திற்கு சொந்தமான ஜியோ சினிமா ஓடிடி தளம், பிரீமியம் சேவைகளுக்கான கட்டணத்தை மாதத்திற்கு வெறும் 29 ரூபாய் என குறைத்துள்ளது. இது இதற்கு முன்பு மாதத்திற்கு 99 ரூபாய் என இருந்தது. எனவே இனி 29 ரூபாய் மட்டும் செலுத்தி ஜியோ சினிமா செயலியில் விளம்பரங்கள் குறுக்கீடு இல்லாமல் வீடியோக்களை கண்டு களிக்கலாம்.

ஜியோ சினிமாவின் ஃபேமிலி பிளானும் மாதத்திற்கு 89 ரூபாய் என குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 89 ரூபாய் செலுத்தி நான்கு கருவிகளில் ஜியோ சினிமா செயலியில் நிகழ்ச்சிகளை காண முடியும். நெட்பிளிக்ஸ், அமேசான் போன்ற பிற ஓடிடி தளங்களுக்கு போட்டியாக தன்னுடைய பிரிமியம் சேவை கட்டணத்தை ஜியோ சினிமா குறைத்துள்ளது.
4கே தரத்தில் வீடியோ, ஹாலிவுட் படங்கள் , குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் என எண்ணிலடங்கா கண்டெண்டுகளை மக்கள் இனி குறைந்த கட்டணத்திலேயே அணுக முடியும் என ஜியோ சினிமா தெரிவித்துள்ளது. நீங்கள் ஏற்கனவே ஜியோ சினிமா பிரீமியம் உறுப்பினராக இருந்தால் எந்தவித கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை, ஜியோ சினிமா ஃபேமிலி பிளானின் கீழ் கிடைக்கும் கூடுதல் பலன்களை இலவசமாக பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ சினிமாவின் இந்த அதிரடி அறிவிப்பு இந்தியாவில் ஓடிடி பயன்பாட்டில் மிகப்பெரிய தாக்கத்தை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் அணுகக் கூடிய வகையில் ஜியோ சினிமா தளத்தை மாற்ற வேண்டும் என்றும், தினமும் அவர்கள் ஜியோ சினிமாவை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் இப்படி அதிரடியாக விலையை குறைத்து இருப்பதாக நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிரண் மணி ப்ளூம்பெர்க் தளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
புகழ்பெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக ஒளிபரப்புவதன் மூலம் ஜியோ சினிமா செயலியின் பயன்பாடு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தற்போது இதன் பிரீமியம் கட்டணமும் குறைக்கப்பட்டு இருப்பதால் ஜியோ சினிமா ஓடிடி தளத்தின் வளர்ச்சி இனிவரும் காலங்களில் பல மடங்கு உயரும் என தெரிகிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குடும்பத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, அதிரடி விலை குறைப்புகளின் மூலம் போட்டி நிறுவனங்களை காலி செய்வதில் வல்லவர். தற்போது அதே யுக்தியை தான் ஜியோ சினிமா செயலிக்காக அவர் கையில் எடுத்துள்ளார்.
அண்மையில் வால்ட் டிஸ்னியுடன் இணைந்து கூட்டு நிறுவனத்தை ஏற்படுத்திய போதே , முகேஷ் அம்பானி அதிரடி அறிவுப்புகளை வெளியிடுவார் என்றும் ஓடிடி தளத்தில் பெரும் மாற்றம் ஏற்படும் என்றும் தகவல்கள் வெளியாகின.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications