முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் வயாகாம் 18 நிறுவனம் வெள்ளிக்கிழமை முதல் முறையாக நடக்கும் Major League Cricket (MLC) போட்டிகளின் ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றியுள்ளது. ஒளிபரப்பு உரிமத்தை எவ்வளவு தொகைக்கு வாங்கப்பட்டது என அறிவிக்கப்படவில்லை.
இந்த உரிமம் மூலம் Major League Cricket (MLC) போட்டிகளை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் ஜியோ சினிமா செயலி மற்றும் ஸ்போர்ட்ஸ்18 டிவி சேனல்களிலும் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. Major League Cricket (MLC) போட்டிகள் ஜூலை 13 ஆம் தேதி அமெரிக்காவில் நடக்கிறது. சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் டி20 லீக் போட்டிகள் நடந்தது.

Major League Cricket (MLC) போட்டிகளில் மொத்தம் 6 அணிகளை விளையாடுகிறது, இதில் 4 அணிகள் தற்போது ஐபிஎல் இருக்கும் முன்னணி அணிகள் கைபற்றி வழிநடத்துகிறது. MI New York, LA Knight Riders, Texas Super Kings, Seattle Orcas (டெல்லி கேபிட்டல்) மற்ற இரண்டு அணி san Francisco Unicorns மற்றும் Washington Freedom.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் வயாகாம் 18 நிறுவனம் தற்போது இந்தியன் பிரீமியர் லீக், SA20, இந்தியாவின் மேற்கிந்திய தீவுகள் டூர் 2023, பாரிஸ் ஒலிம்பிக் 2024, அல்டிமேட் டேபிள் டென்னிஸ், உலக பேடல் லீக், குளோபல் செஸ் லீக், FIFA உலகக் கோப்பை கத்தார் 2022, NBA, டயமண்ட் லீக், லாலிகா, சீரி ஏ, லிக் 1, மற்றும் சிறந்த BWF நிகழ்வுகள்களை ஒளிப்பரப்பு செய்தது.
இந்த நிலையில் அடுத்தாக பல பில்லியன் டாலர் மதிப்பிலான இந்தியாவில் நடக்கும் bilateral போட்டிகளுக்கான அடுத்த 4 வருட ஒளிப்பரப்பு திட்டத்தை கைப்பற்றும் போட்டியில் இறங்க உள்ளது. இதுவும் கைப்பற்றிவிட்டால் இந்திய கிரிக்கெட் அணிகளின் பெரும்பாலான போட்டிகளை ஜியோ சினிமா ஒளிப்பரப்பு செய்யும்.
உலகிலேயே மிகவும் பணக்கார கிரிக்கெட் வாரியமான BCCI இன்று உயர்மட்ட கூட்டத்தை நடத்தியது. இக்கூட்டத்தில் அடுத்த 4 வருடத்திற்கான bilateral போட்டிகளுக்கான ஒளிபரப்பு ஒப்பந்தத்தை எப்படி விநியோகம் செய்வது என ஆலோசனை மேற்கொண்டு உள்ளது.
சமீபத்தில் ஐபிஎல் போட்டிகளுக்கான ஓளிபரப்பு ஒப்பந்தத்தை டிவி-க்கும் டிஜிட்டல்-க்கும் தனித்தனியாக விற்பனை செய்து 48,390 கோடி ரூபாய் திரட்டியது BCCI. தற்போது இதே பார்முலா-வை பயன்படுத்தினால் கட்டாயம் ஜியோ சினிமா பெரும் தொகையை முதலீடு செய்யும்.
2018-23 காலக்கட்டத்திற்கான BCCI MEDIA RIGHTS-ஐ சோனி, ரிலையன்ஸ் ஆகியவற்றை பின்னுக்குத்தள்ளி 6,138.1 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியது ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications