இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானியின் தலைமையிலான ஜியோ பிளாட்பார்ம்ஸ் சமீபத்தில் பாலிகான் லேப்ஸ் உடன் இணைந்து செயல்படவுள்ளதாக அறிவித்தது. வெளியான அறிவிப்பிலிருந்து ஜியோ காயின் இணையத்தில் ஒரு சூறாவளி போல பரவத் தொடங்கியுள்ளது. ஆனால் ஜியோ நிறுவனம் இது குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இதுவரையில் வெளியிடவில்லை. பல பயனர்கள் ட்விட்டரில் ஜியோ காயின் படங்களை பகிர்ந்து கொள்ள தொடங்கியுள்ளனர்.
ஜியோ பிளாட்பார்ம்ஸ், பாலிகான் லேப்ஸின் உதவியுடன், தனது தற்போதுள்ள சேவைகளில் வெப்3 மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளது. இவர்களுடைய கூட்டணியை அறிவித்ததில் இருந்து ஒருவேளை ஜியோ காயின் வெளியிடப்படுமோ? என்ற வியூகத்தில் சோசியல் மீடியா பயனர்கள் போஸ்ட்களை பகிரத் தொடங்கினர். ஆனால் ஜியோ நிறுவனத்தின் சார்பில் இது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை.

பிட்டின்னிங் தலைமை நிர்வாக அதிகாரியான காஷிஃப் ராசாவும் இதைப் பகிர்ந்து கொண்டார். அதோடு ஜியோ காயின்கள் மொபைல் ரீசார்ஜ்கள் மற்றும் ரிலையன்ஸ் கேஸ் ஸ்டேஷனுக்கு சேவைகளை பெற பயன்படுத்தப்படும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
புதிய சேவைகள் மற்றும் பயன்பாடுகள்: இந்த புதிய கூட்டணியின் மூலம் ஜியோ தனது தற்போது உள்ள சேவைகளான தொலைத்தொடர்பு, டிஜிட்டல் சேவைகள், பைனான்ஸ் போன்றவற்றுக்கு வெப்3 அம்சங்களை சேர்க்க உள்ளது. இதன் மூலம் பாதுகாப்பான டேட்டா பரிமாற்றங்கள் மற்றும் புது வகையான டிஜிட்டல் சேவைகளை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.
மேலும் இந்த கூட்டணியின் மூலம் வெப்3 அம்சங்கள் ஜியோ பிளாட்பார்ம்ஸ் இயக்கும் சில தற்போதுள்ள அப்ளிகேஷன்கள் மற்றும் சேவைகளுக்கும் பயன்படுத்தப்படவுள்ளது. ஜியோவின் 450 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு புதுமையான சேவைகளை வழங்க பாலிகான் முன்னணி தொழில்நுட்பமான ப்ளாக்செயினை பயன்படுத்த உள்ளது.
பிளாக்செயின், ஸ்மார்ட் கான்ட்ராக்ட்டுகள், டிஜிட்டல் சொத்துக்கள், கிரிப்டோ கரன்சிகள் மத்திய வங்கியின் டிஜிட்டல் நாணயங்கள் மற்றும் NFTகள் உள்ளிட்டவை வெப்3-இன் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.
பாலிகான் லேப்ஸ் கிரிப்டோகரன்சி மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த கூட்டணி ஜியோ நிறுவனத்திற்கு கிரிப்டோ தொழிலில் நுழைய வாய்ப்பை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ பிளாட்பார்ம்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கிரண் தாமஸ், இந்த கூட்டணி ஜியோவின் டிஜிட்டல் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல் என்று தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications