முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், இந்தியாவின் முன்னணி தொலை தொடர்பு சேவை நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. அண்மையில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களை அதிர்ச்சிப்படுத்தியது. இந்நிலையில் பூஸ்டர் பேக் என்ற மூன்று புதிய டேட்டா திட்டங்களை ஜியோ அறிமுகம் செய்துள்ளது.
ஜியோ ரூ.51 திட்டம்: இந்த புதிய டேட்டா பூஸ்டர் திட்டத்தில் 4ஜி மற்றும் 5ஜி டேட்டா சலுகைகள் கிடைக்கின்றன. அதாவது இந்த பூஸ்டர் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் 3ஜிபிக்கான 4ஜி டேட்டா சலுகை மற்றும் அத்துடன் சேர்த்து அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையையும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

தற்போது நீங்கள் பயன்படுத்தும் திட்டத்தின் வேலிடிடியோடு இவை கிடைக்கின்றன. நாளொன்றுக்கு 1ஜிபிக்கு அதிகமான டேட்டா அல்லது ஒரு மாதம் வேலிடிட்டி கொண்ட திட்டங்களை வைத்திருக்கும் ஜியோ வாடிக்கையாளர்கள் இந்த புதிய திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஜியோ ரூ.101 திட்டம்: இந்த டேட்டா பூஸ்டர் திட்டத்தில் 4ஜி மற்றும் 5ஜி டேட்டா சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் 6ஜிபிஅளவிற்கு 4ஜி டேட்டா சலுகை, அதற்கு பின்னர் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை என பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இந்த திட்டத்தை பெறுவதற்கு 1.5ஜிபி டேட்டா கொண்ட திட்டத்தை வைத்திருக்க வேண்டும் அல்லது ஒரு மாதத்திற்கு மேல் வேலிடிட்டி கொண்ட திட்டங்களில் ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும்.
ஜியோ ரூ.151 திட்டம்: இது ஜியோவின் அதிக விலை கொண்ட பூஸ்டர் திட்டம். இதில் ரீசார்ஜ் செய்தால், 9 ஜிபிக்கான 4ஜி டேட்டா சலுகையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம் அதன் பிறகு அன்லிமிடெட் 5 ஜி டேட்டா சலுகைகள் வழங்கப்படுகின்றன. நாள்தோறும் 1.5ஜிபி டேட்டா திட்டங்களில் ரீசார்ஜ் செய்தவர்களும், இரண்டு மாதங்களுக்கு நிகரான வேலிடிட்டி கொண்ட திட்டங்களை வைத்திருக்கும் ஜியோ வாடிக்கையாளர்களும் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
ஜியோ ஏற்கனவே தினசரி 2ஜிபிக்கும் அதிகமான டேட்டா திட்டங்களில் ரீசார்ஜ் செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி சேவையை வழங்குகிறது. இந்த புதிய பூஸ்டர் திட்டங்கள் நாள்தோறும் 1 ஜிபி மற்றும் 1.5 ஜிபி மொபைல் டேட்டா பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு என பிரத்தியேகமாக கொண்டு வரப்பட்டுள்ளது.
ஜியோ செயலி அல்லது இணையதளம் வாயிலாகவும், யுபிஐ செயலிகள் வாயிலாகவும் இந்த பூஸ்டர் பேக் ரீசார்ஜினை செய்து கொள்ளலாம் என ஜியோ அறிவித்துள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications