சென்னை: ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம், புதன்கிழமை தனது புதிய மொபைல் செயலியான "ஜியோ ஃபைனான்ஸ் ஆப்" (Jio Finance App)-ன் பீட்டா வெர்ஷனை வெளியிட்டுள்ளது.
இந்த செயலி மூலம் யுபிஐ (UPI) பணப் பரிவர்த்தனை, டிஜிட்டல் வங்கி சேவைகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான கடன் வசதிகள் போன்ற பல்வேறு சேவைகளை வழங்க உள்ளது ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம்.

ஜியோ ஃபைனான்ஸ் ஆப் - முக்கிய அம்சங்கள்:
உடனடி டிஜிட்டல் கணக்கு திறப்பு: ஜியோ ஃபைனான்ஸ் ஆப் மூலம் உடனடியாக டிஜிட்டல் வங்கி கணக்கைத் திறக்க முடியும். "ஜியோ பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கு" அம்சம் மூலம் வங்கி பரிவர்த்தனைகளை எளிதாக மேற்கொள்ள முடியும்.
ஒரே இடத்தில் அனைத்தும்: "ஜியோ ஃபைனான்ஸ் ஆப்" டிஜிட்டல் வங்கி சேவைகள், யுபிஐ பரிவர்த்தனைகள், பில் செலுத்துதல், காப்பீட்டு ஆலோசனை போன்ற அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில், வாடிக்கையாளர்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் வழங்குகிறது.
இதைத்தொடர்ந்து முக்கிய சேவையாக வங்கி கணக்குகள் மற்றும் சேமிப்புகளை ஒரே இடத்தில் பார்த்துக்கொள்ளும் வசதியையும் இந்த செயலி வழங்குகிறது.
கடன் சேவைகள்: மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான கடன் வசதிகளைத் தொடர்ந்து, வரும் காலத்தில் வீட்டு கடன்கள் போன்ற பல்வேறு கடன் திட்டங்களை வழங்க ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் திட்டமிட்டுள்ளது.
எளிதான நிதி மேலாண்மை: இந்த செயலி அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்றதாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிதி தொழில்நுட்பம் குறித்த புரிதல் மற்றும் அனுபவம் குறைவாக இருப்பவரும் கூட, எளிதாக இந்த செயலி மூலம் பணத்தை நிர்வகிக்க முடியும்.
"ஜியோ ஃபைனான்ஸ் ஆப்" மக்கள் தங்கள் நிதி மேலாண்மையை முற்றிலும் புதிய முறையில் அணுகுவதற்கு வழிவகுக்கும்" என்று ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications