மும்பை: முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமம் தொடர்ச்சியாக பல்வேறு தொழில்களிலும் கால் பதித்து வருகிறது. அந்த வகையில் அவர்கள் தற்போது மியூச்சுவல் ஃபண்டு பிஸினஸிலும் களமிறங்கியுள்ளனர். ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் மற்றும் பிளாக் ராக் (BlackRock ) நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் பிசினஸை தொடங்க இருப்பது தெரியவந்துள்ளது.
ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனமும் அமெரிக்காவை சேர்ந்த சொத்து மேலாண்மை நிறுவனமான பிளாக் ராக்கும் இணைந்து இரண்டு கூட்டு நிறுவனங்களை அறிவித்துள்ளன. இந்த கூட்டு நிறுவனங்கள் மியூச்சுவல் ஃபண்ட் தொழிலில் ஈடுபட இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த நிறுவனங்கள் ஜியோ ப்ளாக் ராக் ஆசெட் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் (Jio BlackRock Asset Management Private Limited) மற்றும் ஜியோ பிளாக் ராக் டிரஸ்டீ பிரைவேட் லிமிடெட் (Jio BlackRock Trustee Private Limited) என அழைக்கப்பட உள்ளன.
இது கடந்த அக்டோபர் 28ஆம் தேதி மத்திய அரசிடம் பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும் ஒழுங்குமுறை அமைப்புகளிடம் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் ஆவணங்களை வெளியீடு செய்துள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களின் பிரதான தொழில் மியூச்சுவல் ஃபண்டுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஜியோ பிளாக்ராக் ஆசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் 82.50 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் 50% பங்குகள் ஜியோ பைனான்சியஸ் சர்வீசஸ் வசம் உள்ளன. அதேபோல ஜியோ ப்ளாக் ராக் டிரஸ்டி நிறுவனத்தில் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் சார்பாக 40 லட்சம் ரூபாய் முதலீடு செய்யப்பட்டு 50% பங்குகளை கொண்ட நிறுவனமாக இருக்கிறது. இந்த கூட்டு நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் தொழிலில் களமிறங்குகின்றன.
2023 ஜூலை மாதத்தில் தான் ரிலையன்ஸுக்கு சொந்தமான ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனமும் அமெரிக்காவை சேர்ந்த பிளாக் ராக் நிறுவனமும் இணைந்து50: 50 என்ற முதலீட்டில் ஜியோ ப்ளாக் ராக் என்ற கூட்டு நிறுவனத்தை உருவாக்கின. இதனிடையே ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் ஆன்லைன் பேமெண்ட் அக்ரிகேட்டராக ஒரு துணை நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.
அதற்குப் பெயர் ஜியோ பேமெண்ட் சொல்யூஷன்ஸ் லிமிடெட். இந்த நிறுவனம் ஆன்லைன் பேமெண்ட் அக்ரிகேட்டராக செயல்படுவதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. கடந்த 28ஆம் தேதி இந்த அனுமதி வழங்கப்பட்டு விட்டதாக ஜியோ பைனான்ஸில் சர்வீசஸ் தெரிவித்துள்ளது.
Story Written by: Devika
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications