ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தில் இருந்து ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் இன்று காலை 9 -10 மணி வரையில் நடந்த சிறப்பு ப்ரீ ஓப்பனிங் வர்த்தகத்தில் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.
இந்த சிறப்பு ஒரு மணிநேர வர்த்தக முடிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 2580 ரூபாய் விலையில் முடிந்த நிலையில், நேற்றைய என்எஸ்ஈ சந்தையில் 2841.85 ரூபாய்க்கு முடிந்த நிலையில், இவ்விரண்டையும் கழித்த பின்பு ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் 261.85 ரூபாய்க்கு மதிப்பிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சாய்ஸ் ப்ரோகிங் நிறுவனத்தின் நிர்வாக தலைவர் சுமித் கூறுகையில் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் மிகவும் சிறப்பான விலையில் பட்டியலிடப்பட்டு உள்ளது. இந்த சிறப்பு ஒரு மணிநேர வர்த்தக முடிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 2853 ரூபாய் விலையில் முடிந்த நிலையில், பிரிக்கப்பட்ட முன்பு ரிலையன்ஸ் பங்குகள் 2,707 ரூபாய்க்கும், RSIL நிறுவனம் 133 ரூபாய்க்கு மதிப்பிடப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.
இன்று முதல் நிஃப்டி 50 குறியீட்டில் அடுத்த 3 நாட்களுக்கு ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்துடன் சேர்த்து 51 நிறுவனங்கள் இருக்கும். இதேபோல் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனப் பங்குகள் நிஃப்டி 100, நிஃப்டி 200, நிஃப்டி 500 மற்றும் துறைவாரியான குறியீட்டில் சேர்க்கப்பட உள்ளது.
மும்பை பங்குச்சந்தை வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜூலை 20 முதல் 3 நாட்களில் 18 S&P பிஎஸ்ஈ குறியீட்டில் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனப் பங்குகள் சேர்க்கப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த முக்கியமான Demerger பணியில் பங்குகள் கைப்பற்றப்பட்டதற்கான செலவுகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 95.32 சதவீதமும், ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் 4.68 சதவீதமும் ஏற்கிறது.
ஜூலை 19 ஆம் தேதி முடிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் வைத்திருந்த அனைத்து முதலீட்டாளர்களுக்கும் 1:1 மதிப்பீட்டில் பங்குகள் அளிக்கப்பட உள்ளது. இதன் மூலம் 36 லட்சம் முதலீட்டாளர்கள் பலன் பெற உள்ளனர், ஆனால் ஜியோ பைனான்சியல் பங்குகளை யாராலும் வர்த்தகம் செய்ய முடியாது.
ஜியோ பைனான்சியல் பங்குகளை முறையாகப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பின்பு தான் முதலீட்டாளர்கள் இதை வர்த்தகம் செய்ய முடியும். இன்றைய Demerger பணியில் Reliance Strategic Investments பங்குகள் 261.85 ரூபாய்க்கு மதிப்பிடப்பட்டு 36 லட்சம் முதலீட்டாளர்களுக்கு தங்களுடைய டிமேட் கணக்கில் Reliance Strategic Investments பங்குகள் கிரெடிட் செய்யப்படும்.
இந்த பங்குகளைப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் போது ஜியோ பைனான்சியல் எனப் பெயர் மாற்றும் போது Reliance Strategic Investments பங்குகள் டெலிட் ஆகி ஜியோ பைனான்சியல் கிரெடிட் ஆகும். இது லிஸ்டிங் நாளில் நடக்கும், அடுத்த 3 நாட்களுக்குள் அனைத்து முதலீட்டாளர்கள் டிமேட் கணக்கில் Reliance Strategic Investments பங்குகள் கிரெடிட் ஆகும்.
எப்போது லிஸ்டிங் செய்யப்படும் என்பதை முகேஷ் அம்பானி தலைமையிலான நிர்வாகம் விரைவில் அறிவிக்கும், இந்த அறிவிப்பு ரிலையன்ஸ் வருடாந்திர கூட்டத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 2 அல்லது 3 மாதத்தில் பட்டியலிடப்படலாம், அதன் பின்பு அனைத்து முதலீட்டாளர்களும் இப்பங்குகளை வர்த்தகம் செய்ய முடியும் அதுவரையில் Reliance Strategic Investments பங்குகளின் மதிப்பு 261.85 ரூபாய் மட்டுமே.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications