ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் நிதிசேவை பிரிவான ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவன பங்குகள் இன்று காலை 10 மணிக்கு JIOFIN என்ற பெயரில் மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட உள்ளது.
JIOFIN என்ற பெயரில் முதல் 10 நாட்கள் T group-ல் வர்த்தகம் செய்யப்பட உள்ளது. மேலும் JIOFIN பங்குகளின் அப்பர் சர்கியூட் மற்றும் லோவர் சர்கியூட் அளவுகள் 5 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் முதலீட்டாளர்கள் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவன பங்குகளில் முதலீடு செய்யும் போது கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்.

ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவன பங்குகள் முதல் நாளில் பட்டியலிடும் போது 261.85 ரூபாய்க்கு மதிப்பிடப்பட்டு உள்ள நிலையில் இந்தியாவின் 33வது பெரிய நிறுவனமாக உள்ளது. இதோடு NBFC பிரிவில் பஜாஜ் பைனான்ஸ மற்றும் பஜாஜ் பின்சர்வ் தாண்டி 3வது பெரிய நிறுவனமாக உள்ளது.
ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் இதற்கு முன்பு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் கீழ் Reliance Strategic Investments Ltd என்ற பெயரில் பல்வேறு நிதி மற்றும் கடன் சேவைகளை வழங்கி வந்தது. இதேவேளையில் NBFC வங்கி உரிமம் வைத்திருந்த காரணத்தால் இதை தனி நிறுவனமாக பிரித்து சந்தையில் இருக்கும் பிற நிறுவனங்கள் உடன் போட்டு போட முடிவு செய்தது.
இது மட்டும் அல்லாமல் தனியாக பிரிப்பது மட்டும் அல்லாமல் இதன் மூலம் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் சந்தை மதிப்பை உயர்த்த முடிவு செய்தது முகேஷ் அம்பானி தலைமையிலான நிர்வாகம். இதில் மாபெரும் வெற்றியை பதிவு செய்து தற்போது 20.3 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டை பெற்றுள்ளது.
ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் தற்போது கன்ஸ்யூமர் லோன் வழங்கும் சேவையை முக்கியமான வர்த்தகமாக கொண்டு NBFC சேவை பிரிவுக்குள் இறங்கியிருந்தாலும் விரைவில் இன்சூரன்ஸ், டிஜிட்டல் பேமென்ட், அசர்ட் மேனேஜ்மென்ட் பிரிவுக்குள் நுழைய உள்ளது.
ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் பலமே ஜியோ டெலிகாம் பிரிவின் 428 மில்லியன் வாடிக்கையாளர்களும், இந்தியா முழுவதும் இருக்கும் 17000 ரிலையன்ஸ் ரீடைல் கடைகளும் அதன் வாடிக்கையாளர்களும் தான். இதை இரண்டையும் வைத்து ஜியோ பைனான்சியல் தனது கன்ஸ்யூமர் லோன் வர்த்தகத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய முடியும்.
இது தவிர கடந்த மாதம் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் அமெரிக்காவின் பிரபல முதலீட்டு நிறுவனமான பிளாக்ராக் உடன் இணைந்து இந்தியாவில் மியூச்சவல் பண்ட் முதலீட்டு துறைக்குள் நுழைய 50:50 கூட்டணியில் ஜியோ பிளாக்ராக் என்னும் நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.
இந்த ஜியோ பிளாக்ராக் நிறுவனம் ஜியோ டெலிகாம், ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திடம் இருந்து வாடிக்கையாளர் தரவுகளை பகிர உள்ளது. இதன் மூலம் ஜியோ பிளாக்ராக் வேகமாக வளர்ச்சி அடைய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.


Click it and Unblock the Notifications