முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் மதிப்பீட்டை அதிகரிக்கவும், தனது முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான முதலீட்டு மதிப்பை கொடுக்க வேண்டும், புதிய முதலீடுகளை ஈர்க்க ஏதுவான சூழ்நிலையை அமைத்துக்கொள்ளவும் நிதியியல் சேவை பிரிவான ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தை தனியாக பிரிக்க உள்ளது.
சுமார் 20 பில்லியன் டாலருக்கும் அதிக மதிப்பீட்டை பெற்று இருக்கும் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 261 ரூபாயாக உள்ளது. இந்த நிலையில் இன்று இந்திய பங்குச்சந்தையில் காலை 10 மணிக்கு பட்டியலிடப்பட உள்ளது. தகுதியான அனைத்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலீட்டாளர்களின் டிமேட் கணக்கில் தற்போது ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவன பங்குகள் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு JIOFIN என்ற பெயரில் மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு முதல் 10 நாட்கள் T group-ல் வர்த்தகம் செய்யப்பட உள்ளது. மேலும் JIOFIN பங்குகளின் அப்பர் சர்கியூட் மற்றும் லோவர் சர்கியூட் அளவுகள் 5 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
JIOFIN எனப்படும் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவன பங்குகள் இன்று மும்பை பங்குச்சந்தை அலுவலகத்தின் வளாகத்தில் நடக்கும் விழாவின் மூலம் 10 மணிக்கு பட்டியலிடப்பட உள்ளது. இந்த சிறப்பு விழாவில் முகேஷ் அம்பானி கலந்துக்கொள்வாரா என்பது தெரியாது.
ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவன பங்குகள் 261.85 ரூபாய்க்கு மதிப்பிடப்பட்டு பிரிக்கப்பட்ட நிலையில் முதல் நாள் வர்த்தகத்தில் அப்பர் சர்கியூட் 5 சதவீத அளவீட்டை எட்டினால் கட்டாயம் 300 ரூபாயை தாண்டும். அடுத்த 6 மாதத்தில் நிலையான வளர்ச்சி அடையும் பட்சத்தில் 1000 ரூபாய் அளவீட்டை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவன பங்குகள் 261.85 ரூபாய்க்கு மதிப்பிடப்பட்டு உள்ள நிலையில் இதன் சந்தை மதிப்பு 1.66 லட்சம் கோடி ரூபாய் டாலர் மதிப்பீடு என்றால் 20.3 பில்லியன் டாலர். இதன் மூலம் இந்தியாவின் 33வது பெரிய நிறுவனமாக உள்ளது ஜியோ பைனான்சியல் சர்வீசஸ், இதோடு NBFC பிரிவில் பஜாஜ் பைனான்ஸ மற்றும் பஜாஜ் பின்சர்வ் தாண்டி 3வது பெரிய நிறுவனமாக உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications