வங்கி அல்லாத நிதி நிறுவனமான ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் வங்கிகள் மற்றும் பைனான்சியல் சர்வீஸ் துறையில் பெரும் சூறாவளியை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ஹிதேஷ் குமார் சேத்தியா நியமிக்கப்பட்ட போது யார் இவர் என்று மக்கள் மத்தியில் தேடல் அதிகமாக இருந்தது.
இந்த நிலையில் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ஹிதேஷ் குமார் சேத்தியா-வின் சம்பளம் குறித்த செய்தி வெளியாகி மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார்.

உயர் அதிகாரிகளுக்கு சம்பளத்தை வாரி வழங்குவதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பெயர் போனது, இந்த நிலையில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஆச்சானியாக இருக்கப்போகும் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் சிஇஓ ஹிதேஷ் குமார் சேத்தியா-வுக்கு குறைந்த சம்பளமா கொடுக்கப்போகிறது.
ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் சிஇஓ ஹிதேஷ் குமார் சேத்தியா வருடாந்திர சம்பளமாக ரூ.3.30-6.50 கோடி பெற உள்ளார். ஐசிஐசியின் முன்னாள் வங்கியாளரான அவருக்கு செயல்திறன் போனஸாக அவரது சம்பளத்துக்கு மேல் 250 சதவீதம் அளிக்கப்படும்.
தற்போதுள்ள தகவல்படி ஹிதேஷ்குமார் சேத்தியாவின் சம்பளம் ஆண்டுக்கு ரூ.3.30-6.50 கோடி ஆகும். அத்துடன் இந்தாண்டு ஜூலையில் பணியில் சேர்ந்த சேத்தியாவுக்கு வேரியபிள் காம்பன்சேஷனுக்கு தகுதி பெறுகிறார். அவரது திறமையான செயல்பாட்டைப் பொறுத்து 250 சதவீத போனஸ் அளிக்கப்படும்.
ஹெச்டிஎப்சி வங்கி சிஇஓ சதிதர் ஜெகதீசன் 2022-23 ஆண்டுக்கு ரூ.10.55 கோடி சம்பளம் பெற்றார். ஐசிஐசிஐ சிஇஓ சந்தீப் பக்ஷி ரூ.9.57 கோடி பெற்றார். அவர்களுக்கு அடுத்தபடியாக ஆக்ஸிஸ் வங்கியின் அமிதாப் சௌத்திரிக்கு ரூ.9.76 கோடி வழங்கப்பட்டது.
இந்த தனியார் வங்கியின் சிஇஓக்களுக்கு தரப்படுவது போல் அல்லாமல் வரும் மாதங்களில் ஜியோ பைனான்ஸ் செய்யும் வியாபாரத்தைப் பொறுத்து அதிகரிக்கும்.
ரிலையன்ஸ் ஸ்ட்ராட்டஜிக் இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்றிருந்த ஜியோ பைனான்சியல் நாட்டின் மிகப் பெரிய வங்கி அல்லாத பைனான்ஸ் நிறுவனமாக உள்ளது. கன்ஸ்யூமர் சார்ந்த துணை நிறுவனங்கள், கூட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து கடன், பேமென்ட் பிராசஸிங், இன்ஸ்சூரன்ஸ் புரோக்கரேஜ், அசெட் மேனேஜ்மென்ட் ஆகிய விஷயங்களிலும் ஈடுபடும்.
கூட்டு வென்சர் பார்ட்னர்கள் மூலம் நிறுவனத்தை பலமாக்கும் பொறுப்பு சேத்தியாவுக்கு உள்ளது. டெக்னாலஜி, புராடக்ட்ஸ் மற்றும் ஜியாகரபி கையகப்படுத்துதலையும் செய்ய வேண்டும். போட்டி நிறைந்த வங்கிகள் மற்றும் பைனான்ஸ் சர்வீஸில் நாட்டின் மிகப் பெரிய பைனான்ஸ் நிறுவனமாக கொண்டு செலுத்த வேண்டும்.
பைனான்ஸ் சர்வீஸ் இண்டஸ்ட்ரீஸ் மிகப் பெரிய பரப்பைக் கொண்டது. கடன், அட்வைஸரி, இன்சூரன்ஸ், தனியார் பங்கு ஆகிய பிரிவுகளில் தனக்கென ஒழுங்குமுறை அமைப்புகளை தொடங்கி சவால்களை எதிர்கொள்ள வேண்டும். கடும் போட்டி நிறைந்த கடன் வழங்கும் துறையில் ஜியோ தனது முத்திரையை பதிக்க திட்டமிட்டுள்ளது.
வங்கிகளும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள்தான் இதற்கு சவாலாக இருக்கும். வங்கிகளுக்கு லைசென்ஸ் தேவை. கடந்த 20 ஆண்டுகளில் பந்தன் பேங்க், ஐடிஎப்சி பர்ஸ்ட், கோடக், யெஸ் பேங்க் ஆகிய நான்கு வங்கிகள் இதற்கான லைசென்ஸை பெற்றுள்ளன.
இதில் இப்போதுதான் அடியெடுத்து வைத்துள்ள ஜியோ பைனான்ஸ் நீண்டதூரம் செல்ல வேண்டும் என்றாலும் பேங்கிங் லைசன்ஸை பெற்றுள்ளது. பேங்கிங் துறையில் தொழில் குழுமங்களை ரிசர்வ் வங்கி அனுமதித்தாலும் ஜியோ வேறு செயல்பாடுகளுக்கான லைசென்ஸை அடுத்த 3-5 ஆண்டுகளில் பெற வேண்டும்.
அப்போதுதான் எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி, ஐசிஐசி போன்று கார் லோன்கள், அடமானக் கடன், சிறுகுறு நிறுவனங்களுக்கான கடன், விவசாயக் கடன்களை அளிக்க முடியும். சார்டர்டு அக்கவுன்டன்டான சேத்தியா நல்ல புத்திசாலி. ஹார்வர்டு ஸ்கூலில் அட்வான்ஸ்டு மேனேஜ்மன்ட் கல்வியைப் படித்துள்ளார். கே.வி காமத் தலைவராக இருக்கும் நிலையில் புதிய குழுவை அவர் திறம்பட வழி நடத்துவார்.
இருபதாண்டு அனுபவம் மிக்க சேத்தியாவின் திறன் ஸ்ட்ராடஜி டெவலப்மென்ட், மார்க்கெட் எக்பான்ஷன், ரிஸ்க் மேனேஜ்மன்டில் பயனுள்ளதாக இருக்கும். ஐசிஐசி வங்கியை உலகளவில் விரிவுசெய்ததில் சேத்தியாவுக்கு முக்கியப்பங்கு இருக்கிறது. கனடா, ஜெர்மனியில் வங்கியின் நிறுவன உறுப்பினராக இருந்தார். இங்கிலாந்து, ஹாங்காக் கிளைகளில் உயர் பதவிகளை வகித்துள்ளார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications