மும்பை: இந்தியாவின் பெரும் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் தனது ஜூன் காலாண்டு முடிவுகளைத் திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது. 2024-25 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டு என்பதால் இந்த வருடத்திற்கான வர்த்தக போக்கு எப்படியிருக்கும் என்பதை முதலீட்டாளர்கள் அறிந்துக்கொள்ள இந்த காலாண்டு முடிவுகள் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
அந்த வகையில் ஜூன் காலாண்டில் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் லாபம் வருடாந்திர அடிப்படையில் (YoY) 6 சதவீதம் குறைந்தும், காலாண்டு அடிப்படையில் 0.8 சதவீதம் அதிகரித்து 312.63 கோடி ரூபாய் பெற்றுள்ளது என இக்காலாண்டு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மார்ச் காலாண்டில் 310.6 கோடி ரூபாயில் இருந்து 0.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

JFS நிறுவனத்தின் மொத்த செலவுகள் கடந்த ஆண்டின் ஜூன் காலாண்டில் 53.81 கோடியிலிருந்து இந்த ஜூன் காலாண்டில் 79.35 கோடி ரூபாயாக உயர்ந்தன, ஆனால் 2024 மார்ச் காலாண்டில் 103.12 கோடி ரூபாயிலிருந்து குறைந்துள்ளன.
இந்த ஜூன் காலாண்டில் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் 418 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் அறிவிக்கப்பட்ட 414 கோடி அளவீட்டை ஒப்பிடுகையில் 0.9% அதிகமாகும்.
மேலும் இக்காலகட்டத்தில் ஆப்ரேஷன்ஸ் வாயிலாக 134 கோடி ரூபாய் பெற்று இருக்கும் வேளையில், கடந்த ஆண்டில் இதன் அளவு 141 கோடி ரூபாயாக உள்ளது. மார்ச் காலாண்டில் இது 215 கோடி ரூபாயாக உள்ளது.
ஜூன் காலாண்டில் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் மொத்த வட்டி வருமானம் 162 கோடி ரூபாயாக உள்ளது, இது மார்ச் காலாண்டில் 281 கோடி ரூபாயாக இருந்தது. இது கடந்த நிதியாண்டின் ஜூன் காலாண்டில் 202 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இக்காலாண்டு முடிவில் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் தனது புதிய வர்த்தகத்தைத் துவங்கியுள்ளது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. ஜூன் 2024 முதல் AirFiber சாதனங்களை வாடகைக்கு விடத் தொடங்கியதாகவும் அறிவித்துள்ளது.
இதோடு ரிசர்வ் வங்கியிடம் இருந்து ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் NBFC நிறுவனமாக இருந்து core investment company ஆக மாறுவதற்கான ஒப்புதலைப் பெற்றுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இனி ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் core investment company ஆக செயல்படும்.


Click it and Unblock the Notifications