இந்திய பங்குச்சந்தையில் பெரும் பங்கீட்டை கொண்டிருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது நிறுவனத்தின் சந்தை மதிப்பீட்டை அதிகரிக்கவும், வர்த்தகத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டு தனது நிதியியல் சேவை பிரிவை தனியாக பிரித்து பங்குச்சந்தையில் பட்டியலிட முடிவு செய்துள்ளது.
இதற்காக ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் தனியாக பிரிக்கப்பட்டு பங்குச்சந்ததையில் பட்டியலிடப்படும் பணிகள் நடந்து வரும் வேளையில் கடந்த வாரத்தில் அதிகளவிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குதாரர்களுக்கு 1:1 கணக்கில் ஜியோ பைனான்சியல் பங்குகள் டீமேட் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் சுமார் 35.06 லட்சம் பங்கு முதலீட்டாளர்கள் உள்ளனர், அனைவருக்கும் அவரவர் டீமேட் கணக்கில் உரிய பங்குகள் டெபாசிட் செய்யப்பட அடுத்த சில நாட்கள் தேவைப்படும். ஜூலை 20ஆம் தேதி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளில் இருந்து ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் பங்குகளை தனியாக பிரிக்கப்பட்ட போது ஒரு பங்கு 261 ரூபாய் அளவில் மதிப்பீடு செய்யப்பட்டு இருந்தது.
தற்போது ரிலையன்ஸ் பங்குதாரர்கள் டிமேட் கணக்கில் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் டெபாசிட் செய்யப்பட்டாலும், இதை யாரும் விற்பனை செய்யவோ அல்லது கூடுதலாக வாங்கவோ முடியாது. இந்த நிலையில் தான் முகேஷ் அம்பானியின் முக்கியமான அறிவிப்புக்காக ரிலையன்ஸ் பங்குதாரர்கள் காத்திருக்கின்றனர்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகம் எப்போது ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் என்ற தேதியை அறிவிக்கும், அன்று தான் பங்குதாரர்களுக்கு உண்மையாக தங்களுடைய டிமேட் கணக்கில் இருக்கும் ஜியோ பைனான்சியல் பங்குகளை சொந்தம் கொண்டாட முடியும்.
ஜியோ பைனான்சியல் நிறுவனத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது, ஒருபக்கம் தனது சொந்த வர்த்தகத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய உள்ளது, மறுபுறம் பிளாக்ராக் உடன் இணைந்து மியூச்சவல் பண்ட் துறையில் இறங்குவது. கடைசியாக கன்யூமர் லோன் பரிவில் ஆதிக்கம் செய்யும் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்திற்கு போட்டியாக உயர்வது.
இதனால் ஜியோ பைனான்சியல் பங்குகள் பட்டியலிடப்பட்ட நாளில் இருந்து அடுத்த 3 மாதத்திற்குள் 500 முதல் 1000 ரூபாய் விலையில் வர்த்தகம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. இதேவேளையில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் 46வது வருடாந்திர கூட்டம் நடைபெற உள்ளது, இதே நாளில் ஜியோ பைனான்சியல் பட்டியலிடப்படும் நாள் அறிவிக்கப்படும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications