வளர்ச்சியை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் முக்கியமாக ரிலையன்ஸ் ரீடைல் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில் இத்துறை வர்த்தகத்திற்கு உறுதுணையாக இருக்க ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் மூலம் நிதி சேவை துறையில் இறங்க உள்ளது.
இந்த முக்கியமான நிதி சேவை பிரிவின் நிர்வாக இயக்குனராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டு உள்ளார் ஹிதேஷ் குமார் சேத்தியா. முகேஷ் அம்பானி பல மாதங்களுக்கு முன்பு இப்பிரிவுக்கு யார் தலைவர் என்ற தேடலை துவங்கிய நிலையில் ஹிதேஷ் குமார் சேத்தியா-க்கு அழைப்பு விடுத்தார்.
இதன் பின்பு ஹிதேஷ் குமார் சேத்தியா மற்றும் ரிலையன்ஸ் நிர்வாகத்திற்கும் மத்தியில் நடத்த பலக்கட்ட ஆலோசனையில் ஹிதேஷ் குமார் சேத்தியா ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் என்கிற ரிலையன்ஸ் ஸ்ட்ராடஜிக் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் MD மற்றும் சிஇஓ-வாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஹிதேஷ் குமார் சேத்தியா இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவமுள்ள ஒரு சிறந்த நிதிச் சேவை நிர்வாகி ஆவார். அவர் ஐரோப்பா, ஆசியா மற்றும் வட அமெரிக்கா முழுவதும் உள்ள நிறுவனங்களுடன் பணிபுரிந்துள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் மெக்லாரன் ஸ்ட்ராடஜிக் வென்ச்சர்ஸின் முன்னாள் நிர்வாகி ஹிதேஷ் குமார் சேத்தியாவை, அதன் ரிலையன்ஸ் ஸ்ட்ராடஜிக் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் (ஆர்எஸ்ஐஎல்) நிர்வாக இயக்குநராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் (சிஇஓ) நியமித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கையை வெயிட்டு உள்ளது,
ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் சிஇஓ-வாக நியமிக்கப்பட்டு உள்ள Hitesh Kumar Sethia, இதற்கு முன்பு McLaren Strategic Ventures என்னும் மாபெரும் முதலீட்டு நிதியியல் சேவை நிறுவனத்தின் ஐரோப்பிய பிரிவின் தலைவராக இருந்தார். ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவன பணிக்காக பல வருடங்களுக்கு பின்பு இந்தியா வந்துள்ளார்.

ஹிதேஷ் குமார் சேத்தியா அடுத்த 3 வருட காலத்திற்கு ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் சிஇஓ-வாக நியமிக்கப்பட்டு உள்ளார். இவருடைய நியமனத்திற்கு ஆர்பிஐ ஒப்புதல் அளிக்க வேண்டும். ஹிதேஷ் குமார் சேத்தியா ஹார்வார்ட் பிஸ்னஸ் ஸ்கூலில் மேனேஜ்மென்ட் பிரிவில் பட்டம் பெற்றவர், இதுமட்டும் அல்லாமல் தேர்ச்சி பெற்ற சார்ட்டட் அக்கவுண்ட்.
ஹிதேஷ் குமார் சேத்தியா கிரெடிட், ரீடைல் பேங்கிங், டிரான்சாக்ஷன் பேங்கிங், கார்பரேட் பேங்கிங் என பிரிவுகளில் அனுபவம் இருப்பது மட்டும் அல்லாமல், முன்னணி நிதி சேவை நிறுவனங்களின் தொழில்நுட்ப கட்டமைப்பில் அனுபவம் கொண்டவர்.
இதற்கு முன்பு Hitesh Sethia ஐசிஐசிஐ வங்கியின் பல முக்கியமான பதவிகளில் இருந்தார், 2000 முதல் ஜூன் 2022 வரையில் இவர் ஐசிஐசிஐ வங்கியின் சென்னை, டொராண்டோ, பிராங்பர்ட், லண்டன், மும்பை மற்றும் ஹாங்காங் என பல பிராந்திய வர்த்தகத்திற்கு தலைவராக இருந்துள்ளார். 2022 ஆம் ஆண்டு தான் McLaren Strategic Ventures நிறுவனத்தின் ஐரோப்பிய தலைவராக சேர்ந்தார்.
இது மட்டும் அல்லாமல் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தை ஜூலை 20 ஆம் தேதி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ல் இருந்து தனியாக பிரித்து, பங்குச்சந்தையில் பட்டியலிட உள்ளார் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ல் இருந்து தனியாக பிரிக்கப்படும் காரணத்தால் அனைத்து பங்குதாரர்களுக்கும் 1:1 என்ற வீதத்தில் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அளிக்கப்பட உள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications