ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தில் இருந்து தனியாக பிரிக்கப்பட்ட துணை நிறுவனமான ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நாளில் இருந்து பல மற்றங்களை எதிர்கொண்டு வரும் வேளையில், Nifty50 உட்பட அனைத்து NSE குறியீடுகளில் இருந்தும் வியாழக்கிழமை முதல் ஜியோபின் பங்குகள் நீக்கப்பட உள்ளது.
புதன்கிழமை வர்த்தகத்தின் கடைசி அரை மணி நேரத்தில் இந்த ஜியோ பைனான்சியல் பங்கு பிரிப்பு நடைபெறும் என்று என்எஸ்இ தெரிவித்துள்ளது. இதன் மூலம் 105 மில்லியன் பங்குகள் ரீடைல் வர்த்தக சந்தைக்கு வர உள்ளது, இதனால் நாளை காலை 2700 கோடி ரூபாய் மதிப்பிலான ஜியோபின் பங்குகள் வர்த்தக சந்தைக்கு வர உள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் 2.3 சதவீதம் சரிந்து 249.20 ரூபாய் அளவில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. ஜியோ பின் பங்குகள் சந்தை கணிப்புகளை பல இடத்தில் உடைத்திருக்கும் காரணத்தால் இப்பங்குகளின் போக்கை கணிப்பதில் அதிகப்படியான சவால்கள் உள்ளது.
சமீபத்தில் மும்பை பங்குச்சந்தை அனைத்து குறியீடுகளிலும் இருந்து ஜியோ பின் பங்குகள் வெளியேற்றப்பட்ட போது இதன் அப்பர் மற்றும் லோவர் சர்கியூட் அளவு 5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த மாற்றம் நடந்த அடுத்த நாளில் 8 சதவீதம் வரையில் உயர்ந்தது.
ஜியோ பின் பங்குகள் பட்டியலிடும் போது பெறப்பட்ட 261 ரூபாய் விலையை இன்னும் எட்ட முடியாமல் தவித்து வருகிறது. ஆகஸ்ட்21 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக ரீடைல் வர்த்தகத்திற்கு அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து தொடர் சரிவை சந்தித்த ஜியோ பின் பங்குகள் ரிலையன்ஸ் வருடாந்திர கூட்டத்திற்கு பின்பு உயர்ந்து அதிகப்படியாக 278.20 ரூபாய் விலையை எட்டியது. இதேவேளையில் ஜியோ பின் பங்குகள் 205.15 ரூபாய் வரையிலும் சரிந்தது.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் டீமெர்ஜர்-ல் பங்குகளை பெற்ற பங்கு முதலீட்டாளர்கள் ஜியோ பின் பங்குகள் இதுவரையில் 0.73 சதவீத இழப்பை எதிர்கொண்டு உள்ளனர். கடந்த ஒரு மாத காலக்கட்டத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 3.50 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications