இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குமுமத்தின் மதிப்பீட்டை அதிகரிக்கவும், தனது முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான முதலீட்டு மதிப்பை கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு இக்குழுமத்தின் நிதியியல் சேவை பிரிவான ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தை தனியாக பிரித்து பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது.
சுமார் 20 பில்லியன் டாலருக்கும் அதிக மதிப்பீட்டை பெற்று இருக்கும் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 261 ரூபாயாக மதிப்பிட்டு பட்டியலிடப்பட்டது. ஆனால் பட்டியலிடப்பட்ட நாளில் இருந்து தினமும் 5 சதவீத லோவர் சர்கியூட் அளவீட்டை தொட்டு வருகிறது.

ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் பங்குகளை பெற வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் அதிகப்படியான ரீடைல் முதலீட்டாளர்கள் அதிகப்படியான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை வாங்கினர். தற்போது ஜியோ பைனான்சியல் பட்டியலிடப்பட்ட பின்பு அதை விற்பனை செய்ய துடியாய் துடிக்கின்றனர்.
இதனால் ஜியோ பைனான்சியல் பங்குகள் பட்டியலிடப்பட்ட நாளில் இருந்து அதாவது தொடர்ந்து 3 நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது, அதுவும் லோவர் சர்கியூட் அளவான 5 சதவீதத்தில். ஜியோ பைனான்சியல் பங்குகள் 265 ரூபாய் விலையில் பட்டியலிடப்பட்ட நிலையில் தற்போது 227.25 ரூபாய் விலையில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. பட்டியலிடப்பட்ட நாளில் 287.20 ரூபாய் வரையில் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி ஜியோ பைனான்சியல் பங்குகள் அனைத்து S&P BSE குறியீட்டில் இருந்து வெளியேற உள்ளது. இதேவேளையில் எல்ஐசி ஜியோ பைனான்சியல் நிறுவனத்தின் 6.66 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் இன்று 0.65 சதவீதம் உயர்ந்து 2535.25 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது.
ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் கன்ஸ்யூமர் லோன் வழங்கும் சேவையை முக்கிய வர்த்தகமாக கொண்டு NBFC பிரிவுக்குள் இறங்கியிருந்தாலும் விரைவில் இன்சூரன்ஸ், டிஜிட்டல் பேமென்ட், அசர்ட் மேனேஜ்மென்ட் பிரிவுக்குள் நுழைவதை முக்கிய இலக்காக கொண்டு உள்ளது. இதன் மூலம் பஜாஜ் பின்சர்வ், பேடிஎம் ஆகிய நிறுவனங்கள் உடன் நேருக்கு நேர் போட்டிப்போட உள்ளது.
ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் தனியாக பிரித்து NBFC இறங்கி தனியாக போட்டிப்போட முக்கிய காரணம் ஜியோ டெலிகாம் பிரிவின் 428 மில்லியன் வாடிக்கையாளர்களும், இந்தியா முழுவதும் இருக்கும் 17000 ரிலையன்ஸ் ரீடைல் கடைகளும் அதன் வாடிக்கையாளர்களும் தான். இது தான் ஜியோ பைனான்சியல் நிறுவனத்தின் பலமாக உள்ளது.
இதை இரண்டையும் வைத்து ஜியோ பைனான்சியல் தனது கன்ஸ்யூமர் லோன் வர்த்தகத்தை மிகவும் குறுகிய காலத்தில் மிகபெரிய அளவில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடியும். இது ஒருபக்கம் இருக்கு ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் இன்சூரன்ஸ், டிஜிட்டல் பேமென்ட் துறையில் இறங்க திட்டமிட்டு இருக்கும் இதேவேளையில் அசர்ட் மேனேஜ்மென்ட் பிரிவில் இறக்குவதற்கான பணிகளை துவங்கியுள்ளது.
முதல் கட்டமாக கடந்த மாதம் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் அமெரிக்காவின் பிரபல முதலீட்டு நிறுவனமான பிளாக்ராக் உடன் இணைந்து இந்தியாவில் மியூச்சுவல் பண்ட் முதலீட்டு துறைக்குள் நுழைய 50:50 கூட்டணியில் ஜியோ பிளாக்ராக் என்னும் நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications