ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவன பங்குகள் இன்று மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. முதல் நாளில் பட்டியலிடும் போது 261.85 ரூபாய்க்கு மதிப்பிட்ட நிலையில் இன்று 5 சதவீதம் சரிந்துள்ளது.
JIOFIN என்ற பெயரில் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவன பங்குகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் 10 நாட்கள் T group-ல் வர்த்தகம் செய்யப்பட உள்ளது. மேலும் JIOFIN பங்குகளின் அப்பர் சர்கியூட் மற்றும் லோவர் சர்கியூட் அளவுகள் 5 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இன்று காலை வர்த்தகம் துவங்கியதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட JIOFIN பங்குகள் 5 சதவீதம் சரிந்து லோவர் சர்கியூட் அளவீட்டை தொட்டு 251.75 ரூபாய் வரையில் சரிந்துள்ளது. இதன் மூலம் முதல் நாளே லோவர் சர்கியூட் அளவீட்டை தொட்டு உள்ளது.
மும்பை பங்குச்சந்தையில் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவன பங்குகளை விற்பனை செய்வோர் எண்ணிக்கை தடாலடியாக உயர்ந்திருக்கும் வேளையில் வாங்குபவர்கள் எண்ணிக்கை ஜீரோவாக உள்ளது. தற்போதைய நிலவரத்தின் படி மும்பை பங்குச்சந்தையில் சுமார் 33.8 லட்சம் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் விற்பனைக்கு வந்துள்ளது.

ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அடுத்த 10 நாட்களுக்கு Trade-for-Trade பிரிவில் வர்த்தகம் செய்யப்பட உள்ளதால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் இன்டிராடே டிரேடிங் செய்ய முடியாது. ஆனால் முதலீட்டாளர்கள் டெலிவரி அடிப்படையிலான வாங்குதல் மற்றும் விற்பனை நடவடிக்கையை மேற்கொள்ள முடியும்.
முதல் நாளில் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அப்பர் சர்கியூட் அளவான 278.20 ரூபாய் அளவீட்டை தொட்ட அடுத்த சில நிமிடத்தில் 251.75 ரூபாய் என்ற லோவர் சர்கியூட் அளவீட்டை இன்று தொட்டது. சரியாக 11 மணிக்கு 34.57 லட்சம் பங்குகள் விற்பனை சந்தைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தேசிய பங்குச்சந்தையில் ஜியோபின் பங்குகள் 248.90 ரூபாய் வரையில் சரிந்துள்ளது.



Click it and Unblock the Notifications