ஜியோ இண்டஸ்ட்ரீஸ் லிமெடெட்டின் துணை நிறுவனமான ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் ஆகஸ்ட் 21 ஆம் தேதி பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், மார்க்கெட் மூலதனம் இதுவரை ரூ.31,000 கோடி சரிந்து விட்டது. இதனால் ஜியோ பைனான்ஸ் சர்வீஸஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஆனால் இன்று 2.47 சதவீதம் உயர்ந்து 217.60 ரூபாயாக உள்ளது.
இன்றைய உயர்வுக்கு இன்று மதியம் 2 மணிக்கு நடக்க இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் வருடாந்திர கூட்டம் முக்கிய காரணமாக இருந்தாலும், இதுநாள் வரையில் சரிய என்ன காரணம் என்பதை முதலீட்டாளர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

ஜியோ நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்தால் பணம் கொட்டோ கொட்டு என்று குவியும் என்ற முதலீட்டாளர்களின் நினைப்பில் மண் விழுந்தது. ஆனால் இன்றைய வர்த்தகத்தின் மூலம் மீண்டும் நம்பிக்கை பூத்துள்ளது.
ஜியோ பைனான்சியல் சர்வீஸஸின் பங்குகள் தொடர்ந்து நான்கு நாட்களாக 5 சதவீதம் லோயர் சர்க்கியூட்டில் இருந்தது. ரூ.261.8 என்ற கான்ஸ்டன்ட் விலையில் இருந்து ரூ.213.45க்கு வந்துவிட்டது.
மியூச்சுவல் பண்டுகள் மூலம் தாராளமான விற்பனை செய்யப்பட்டதன் விளைவாக இவ்வாறு விலை குறைந்துவிட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இண்டெக்ஸ் பண்டுகள் மூலம் விற்கப்படுவதால் கவுன்ட்டரில் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதியன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் இருந்து ஜியோ பைனான்ஸ் நிறுவனம் பிரிக்கப்பட்டு பம்பாய் பங்குச் சந்தையில் ரூ.265க்கு பங்குகள் பட்டியலிடப்பட்டது. தேசியப் பங்குச் சந்தையில் ரூ.261.85 ஆக பட்டியலிடப்பட்டது.
டிரேட் டு டிரேட் செக்மென்டில் 10 வர்த்தக நாட்களுக்கு கம்பெனி இருக்கும். இந்த செக்மென்டில் டெலிவரி முறையில் பங்குகள் விற்கப்படும். தினசரி வர்த்தகத்தில் டிரேட் செய்யத் தகுதியில்லை.
ஜியோ பைனான்ஸ் சர்வீஸஸ் தற்போது பம்பாய் பங்குச்சந்தை சென்செக்ஸிலும் தேசிய பங்குச்சந்தை நிப்டி 50இல் மற்ற முக்கிய இண்டெக்ஸ்களுடன் இருக்கும்.
இண்டெக்ஸ் புரொவைடரான ஏசியா இண்டெக்ஸ் பிரைவேட் லிமிடெட், இந்த பங்கை பம்பாய் பங்குச்சந்தையின் அனைத்து இண்டெக்ஸில் இருந்தும் சென்செக்ஸிலிருந்தும் மூன்று நாட்களுக்கு விலக்குவதற்கு உத்தரவிட்டுள்ளது. தொடர்ச்சியாக இரண்டு நாட்களாக பங்கு மதிப்பு லோயர் சர்க்கியூட்டை தொட்டதால் இந்த நடவடிக்கை.
முன்னதாக ஜியோ பைனான்சியல் சர்வீஸஸ் ஆகஸ்ட் 29இல் S&P BSEஇன் அனைத்து இண்டெக்ஸில் இருந்து வெளியேறுவதாக இருந்தது. 3 நாட்களுக்கு லோயர் சர்க்யூட்டை எட்டாமல் இருந்ததால் இந்த நிலைமை இருந்தது. இருப்பினும் விலகல் தேதி மேலும் மூன்று நாட்கள் தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் பங்குகள் தொடர்ந்து லோயர் சர்க்கியூட்டை எட்டின.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications