இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் நிதி சேவை பிரிவான ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் ஏற்கனவே கன்ஸ்யூமர் பொருட்களுக்கான கடன்களை அளித்து வரும் வேளையில், மியூச்சவல் பண்ட் முதலீட்டு சேவைக்காக அமெரிக்காவின் பிளாக்ராக் நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்துள்ளது.
அடுத்த கட்டமாக முகேஷ் அம்பானி வங்கிகளுக்கு இணையாக ஆட்டோ லோன், ஹோம் லோன் போன்ற முக்கியமான கடன் திட்டங்களை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் சந்தையில் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் ஒரு முழு நிதியியல் சேவை அளிக்கும் நிறுவனமாக தன்னை காட்டிக்கொள்ள முயற்சிக்கிறது.

இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் மக்கள் தொகையை ஒப்பிடுகையில், நாட்டின் வளர்ச்சி சிறப்பாக இருந்த போதிலும் மக்களுக்கு கிடைக்கும் நிதியியல் சேவைகள் அளவு என்னவோ குறைவாக தான் உள்ளது. இன்னும் இன்சூரன்ஸ், முதலீடு, கடன் சேவைகள் கிடைக்காமல் இருக்கும் மக்கள் ஏராளம். இந்த சந்தையை குறிவைத்து தான் முகேஷ் அம்பானி டெலிகாம், ரீடைல் துறையில் செய்த அதிரடியை நிதி துறையிலும் செய்ய உள்ளார்.
ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் ஏற்கனவே மாதம் சம்பளம் வாங்குவோர் மற்றும் சுய தொழில் செய்பவர்களுக்கு மும்பை சந்தையில் பர்சனல் லோன் கொடுக்க துவங்கியுள்ளது. மேலும் இந்தியாவில் ரிலையன்ஸ் டிஜிட்டல் பிராண்டின் 300 கடைகளில் கன்ஸ்யூமர் டியூரபிள் கடன்களை கொடுக்கும் சேவையை அளித்து வருகிறது.
விரைவில் சுய தொழில் செய்பவர்களுக்கு வர்த்தகம் மற்றும் வியாபாரிகள் கடன் வழங்க உள்ளது. ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் இன்சூரன்ஸ் சேவை வழங்குவதற்காக சுமார் 24 காப்பீட்டு நிறுவனங்கள் உடன் இணைந்துள்ளது. இதற்கு முன்பு பல்வேறு பில் பேமெண்ட் சேவைகளை அறிமுகம் செய்ய உள்ளது.
இதை தொடர்ந்து ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் தனியாக டெபிட் கார்டு அறிமுகம் செய்யும் திட்டத்தையும் கையில் வைத்துள்ளது. செப்டம்பர் காலாண்டில் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் மொத்த லாபமாக 668.2 கோடி ரூபாய் அளவிலான தொகையை பெற்றுள்ளது. இது முந்தைய காலாண்டை காட்டிலும் சுமார் 2 மடங்கு அதிக லாபத்தை பெற்றுள்ளது.
ஜியோ பைனான்சியல் சரிவீசஸ் நிறுவன பங்குகள் இன்று 1.53 சதவீதம் சரிந்து 221.40 ரூபாய்க்கு குறைந்துள்ளது. இந்நிறுவனத்தின் 52 வார உயர்வு அளவு 278.20 ரூபாயாகும்.


Click it and Unblock the Notifications