டேட்டா பயன்பாட்டில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் உலக அளவில் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்தியாவில் தனியார் டெலிகாம் நிறுவனங்கள்தான் தொலைத்தொடர்பு துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. அந்த வகையில் சில ஆண்டுகளுக்கு முன்புதான் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சந்தையில் கால் பதித்தது. ஆனால் குறுகிய காலத்திலேயே இந்த நிறுவனம் அதிக அளவிலான வாடிக்கையாளர்களை ஈர்த்துவிட்டது.
தற்போது இந்தியாவிலேயே அதிக வாடிக்கையாளர்களை பெற்றிருக்கக் கூடிய ஒரு தொலை தொடர்பு நிறுவனமாக ஜியோ தான் இயங்கி வருகிறது. jio-விற்கு அடுத்ததாக இந்த இடத்தில் ஏர்டெல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தற்போது ஜியோ நிறுவனம் மற்றொரு பெருமையை பெற்று இருக்கிறது. சர்வதேச அளவில் சர்வதேச அளவில் அதிக அளவு டேட்டா பயன்படுத்தப்படும் ஒரு தொலை தொடர்பு நிறுவனம் என்ற பெயரை ஜியோ நிறுவனம் பெற்றுள்ளது. அந்த வகையில் ஜியோ நிறுவனத்தில் டேட்டா பயன்பாடு அளவு என்பது 25 முதல் 30 எக்ஸா பைட்டுகள் என இருக்கிறதாம். உலகிலேயே இதுதான் அதிகம் என சொல்லப்படுகிறது.

ஒரு எக்ஸா பைட் என்பது ஒரு பில்லியன் கிகா பைட்டுகளுக்கு சமம். அந்த வகையில் ஜியோ நிறுவனத்தில் டேட்டா பயன்பாடு 25 முதல் 30 எக்ஸா பைட்டுகள் ஆகும். இதுதான் உலகிலேயே அதிக பட்சம் ஆகும். அடுத்தாக சீனாவின் சீனா மொபைலில் டெலிகாம் நிறுவனத்தின் டேட்டா பயன்பாடு 20 முதல் 25 எக்ஸா பைட்டுகளாகவும் இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு அடுத்ததாக இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பது மற்றொரு சீன நிறுவனம்தான். இது சீனா டெலிகாம் நிறுவனம. இந்த நிறுவன பயனாளர்கள் டேட்டா பயன்படுத்தும் விகிதம் 15 முதல் 20 எக்ஸா பைட்டுகளாக இருக்கிறது.
மற்றொரு சீனா நிறுவனமான சீனா யூனிகான் 10 முதல் 15 எக்ஸா பைட்டுகள் டேட்டா பயன்படுத்தும் நிறுவனமாக இருக்கிறது. இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் ஏர்டெல் நிறுவனம் இருக்கிறது. ஏர்டெல் சிம் கார்டை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 10 முதல் 12 எக்ஸா பைட் டேட்டாவை பயன்படுத்தி உள்ளனர். அடுத்ததாக வோடபோன் நிறுவனம் 8 முதல் 10 எக்ஸா பைட்டுகள் பயன்படுத்தும் நிறுவனமாக இருக்கிறது.
Written by: Devika


Click it and Unblock the Notifications