சென்னை: ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமான ஜியோ நிறுவனம் 601 ரூபாய் ஓராண்டு காலத்திற்கான அன்லிமிடெட் 5ஜி அப்கிரேட் பேக்கினை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் டெலிகாம் துறையில் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ இருந்து வருகிறது. அவ்வப்போது அதிரடியான ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வதோடு மட்டுமில்லாமல் புதிதாகவும் வாடிக்கையாளர்களை ஈர்க்கச் செய்கிறது. அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒரு ஆண்டுக்கு 601 ரூபாயில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

ப்ரீபெய்ட் பிளானில் 299 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அவர்கள் இந்த 601 ரூபாய் பிளானுக்கு கூடுதலாக ரீசார்ஜ் செய்து கொண்டால் அன்லிமிடெட் 5 ஜி நெட்வொர்க் கனெக்டிவிட்டியை பயன்படுத்த முடியும்.
ஜியோ நிறுவனம் இந்த திட்டத்தை "ultimate 5G upgrade voucher" என அழைக்கிறது. எந்த ஒரு 4ஜி நெட்வொர்க்கில் உள்ள பயனர்களும் 5 ஜி சேவையை அனுபவிக்கும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் தான் ஜியோ நிறுவனம் தங்களுடைய ரீசார்ஜ் கட்டணங்களை கணிசமான அளவு உயர்த்தியது. ஜியோவின் அறிவிப்பை தொடர்ந்து ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்களும் தங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தின. இதனால் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தை நோக்கி நகர தொடங்கினர். எனவே வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் பொருட்டு ரிலையன்ஸ் ஜியோ அடுத்தடுத்த ஆஃபர்களை அறிவித்த வண்ணம் இருக்கிறது.
ஜூலை மாத ரீசார்ஜ் கட்டண உயர்வினை தொடர்ந்து ஒரு நாளைக்கு 2 ஜிபிக்கும் மேல் டேட்டா பயன்பாடு கொண்ட திட்டங்களில் ரீசார்ஜ் செய்தவர்களுக்கு மட்டுமே அன்லிமிடெட் 5ஜி சேவை வழங்கப்படும் என அறிவித்தது. இந்த 601 ரூபாய் திட்டமானது ஓராண்டு காலத்திற்கு அவர்கள் எந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்திருந்தாலும் 5ஜி டேட்டா அன்லிமிடெட் ஆக கிடைக்க வழி வகை செய்கிறது.
பயனாளர்கள் இதனை நேரடியாக ஜியோ செயலி வாயிலாக வாங்கி ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். ஆனால் இதனை 299 ரூபாய் மற்றும் அதற்கு மேல் கட்டணம் கொண்ட திட்டங்களில் ரீசார்ஜ் செய்தவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
அதே போல ஜியோ டேட்டா ஒன்லி ஆப்ஷன் என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி 11 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் ஒரு மணி நேரத்திற்கு 10 ஜிபி டேட்டா பயன்படுத்தலாம். அதே போல 49 ரூபாய், 175 ரூபாய் என டேட்டா மட்டுமே கொண்ட திட்டங்களும் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications