வாடிக்கையாளர்களை கவரும் விதமாக ஜியோ நிறுவனம் புதிதாக ஒரு பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் படி வாடிக்கையாளர் 15 ஓடிடி தளங்களின் பிரீமியம் சேவைகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
மாதத்திற்கு 888 ரூபாய் செலுத்தினால் போதும் வாடிக்கையாளர்கள் இந்த பிராட்பேண்ட் திட்டத்தின் மூலம் நெட்ஃபிளிக்ஸ் உள்ளிட்ட 15 ஓடிடி தளங்களின் பிரீமியம் சேவைகளை பெற முடியும் என ஜியோ நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.

புதிய பிராட்பேண்ட் பிளானில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் 30 mbps என்ற வேகத்தில் இணைய சேவையை பெற முடியும். அதுமட்டுமின்றி நெட்ஃபிளிக்ஸ், அமேசான் ப்ரைம் லைட், டிஸ்னி + ஹாட்ஸ்டார் என முக்கியமான 15 ஓடிடி தளங்களின் பிரீமியம் சேவைகளையும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என ஜியோ அறிவித்துள்ளது.
இதற்கு முன்பு ஜியோவில் மாதத்திற்கு 1499 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் மட்டுமே நெட்ஃப்ளிக்ஸ் அணுகலானது கிடைத்தது. இந்த நிலையில் முதன்முறையாக ஜியோ நிறுவனம் பட்ஜெட் பிராட்பேண்ட் திட்டத்தில் ஓடிடி தளங்களையும் சேர்த்துள்ளது.
இந்த புதிய போஸ்ட்பெய்டு பிளானின் படி வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு 888 ரூபாய் செலுத்தினால் போதும். ஜியோ பைபர் மற்றும் ஜியோ ஏர் பைபர் வாடிக்கையாளர்கள் இதன் மூலம் நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் (Amazon Prime Video), ஜியோ சினிமா ப்ரீமியம்( JioCinema Premium), டிஸ்னி + ஹாட்ஸ்டார் (Disney+Hotstar), சோனி லைவ் (SonyLIV), ஸீ5( Zee5),சன் நெக்ஸ்ட்( Sun NXT), ஹோய்சொய் (HoiChoi), டிஸ்கவரி+(Discovery+), ஆல்ட் பாலாஜி(ALT Balaji),ஈரோஸ் நவ்( Eros Now), லையன்ஸ் கேட் பிளே (Lionsgate Play), ஷீமாரோ மீ (Shemaroo Me), டாகுபே (Docubay), மற்றும் எபிக் ஆன் ( Epic On) ஆகிய 15 பிரதானமான ஓடிடி செயலிகளை இலவசமாக பார்த்துக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி 800க்கும் அதிகமான டிஜிட்டல் டிவி சேனல்களை அணுகலாம் என்றும் ஜியோ நிறுவனம் கூறியுள்ளது.
தங்களது இணைய சேவை மற்றும் ஓடிபி சந்தா சேவைகள் அனைத்து வாடிக்கையாளர்களையும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்துடனே இந்த புதிய பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகம் செய்திருப்பதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது ஜியோ பைபர் மற்றும் ஜியோ ஏர் பைபர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அனைவருமே குறிப்பாக பிரிபெய்ட் பிளான் திட்டத்தில் இருப்பவர்கள் கூட இந்த புதிய போஸ்ட் பெய்டு பிளான் திட்டத்தில் இணைந்து ஓடிடி சேவைகளை பெற்றுக் கொள்ளலாம் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
கூடுதலாக ஜியோ நிறுவனம் ஜியோ ஐபிஎல் தன் தனா தன் (Jio IPL Dhan Dhana Dhan) என்ற சலுகையையும் அறிவித்தது. இதன்படி தகுதி வாய்ந்த ஜியோ ஃபைபர் அல்லது ஏர் ஃபைபர் வாடிக்கையாளர்கள் 50 நாட்களுக்கான தள்ளுபடியுடன் கூடிய ஒரு கிரெடிட் வவுச்சரை பெற்றுக் கொள்ள முடியும்.
மே 31ஆம் தேதி வரை இந்த சலுகை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளை கவனத்தில் கொண்டு இது சலுகை வழங்கப்படுகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications