Jio IPO: முதலீட்டாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. உடனே உங்க டீமேட் கணக்கை செக் பண்ணுங்க..!

மும்பை பங்குச்சந்தை இன்று சரிவுடன் துவங்கினாலும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மிகவும் ஆர்வமுடன் இருக்க முக்கியமான காரணம் ஜியோ நிறுவனத்தின் ஐபிஓ-வின் அலாட்மென்ட் விபரம் வெளியாக உள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனத்திற்கான ஐபிஓ கதவுகள் அக்டோபர் 19ஆம் தேதி தனது ஆங்கர் முதலீட்டாளர்களுக்கும், அக்டோபர் 21 ஆம் தேதி ரீடைல் முதலீட்டாளர்களுக்கும் திறக்கப்பட்ட நிலையில் 5 நாள் முடிவில் சுமார் 21 மடங்கு அதிக பங்குகளுக்கு முதலீட்டு விருப்பம் குவிந்து மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது.

Jio IPO: முதலீட்டாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. உடனே உங்க டீமேட் கணக்கை செக் பண்ணுங்க..!

இந்த நிலையில் இன்று ஐபிஓ-வில் முதலீடு செய்தோருக்கான பங்கு அலாட்மென்ட் செய்யப்படுவதற்கான இறுதி முடிவுகள் வெளியாக உள்ளது.

ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவன ஐபிஓ-வில் முதலீடு செய்தோர் 3 வழிகளில் தங்களுக்கு அலாட்மென்ட் கிடைத்துள்ளதா என்பதை தெரிந்துகொள்ள முடியும்.

இதற்கு முன்பு ஒரு ஐபிஓ-வில் பங்குகள் எப்படி முதலீட்டாளர்களுக்கு அலாட் செய்யப்படும் என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்.

செபி விதிகள் படி ஒரு நிறுவனத்தின் ஐபிஓ-வில் வெளியிடப்பட்ட பங்குகளுக்கும் குறைவாக சப்ஸ்கிரைப் செய்யப்பட்டு இருந்தால் அனைத்து ரீடைல் முதலீட்டாளர்களுக்கும் பங்குகள் பகிர்ந்து அளிக்கப்படும்.

இதுவே ஓவர் சப்ஸ்கிரைப் செய்யப்பட்டு இருந்தால் ரீடைல் முதலீட்டாளர்களுக்குக் குலுக்கல் அடிப்படையில் ஒதுக்கப்படும். அதாவது முதலீட்டாளர்களை Random முறையில் தேர்வு செய்து பங்குகள் அலாட் செய்யப்படும்.

பங்குகள் அலாட்மென்ட் செய்யப்படாத ரீடைல் முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்த தொகை முழுமையான ரீபண்ட் செய்யப்படும்.

இதுவே NII, QIB மற்றும் HNI பிரிவில் ஒதுக்கப்பட்ட பங்குகள் ஓவர் சப்ஸ்கிரைப் செய்யப்பட்டு இருந்தால் முதலீட்டாளர்களுக்கு pro-rata அடிப்படையில் அதிக பங்குகளுக்கு முதலீடு செய்தவர்கள் முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்த நிலையில் ஜியோ பிளாட்பார்ம்ஸ் ஐபிஓ-வில் 22.19 மடங்கு அதிக முதலீடு குவிந்து ஓவர் சப்ஸ்கிரைப் செய்யப்பட்டு 30000 கோடி ரூபாய் ஐபிஓ-வுக்கு சுமார் 7.4 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீடு இந்த ஐபிஓ-வில் குவிந்துள்ளது.

இதேபோல் மொத்த 1.39 கோடி முதலீட்டாளர்கள் இந்த ஐபிஓ-வில் முதலீடு செய்துள்ளதால் ரீடைல் முதலீட்டாளர்களுக்கு அலாட்மென்ட் பெறுவது என்பது மிகவும் கடினமாக மாறியுள்ளது. இன்று அலாட்மென்ட் பணிகள் நடக்க உள்ளதால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

சரி, எப்படி ஜியோ பிளாட்பார்மஸ் ஐபிஓ-வில் அலாட்மென்ட் செக் செய்ய வேண்டும்..? KFin Technologies, NSE, BSE ஆகிய 3 வழிகளில் ஐபிஓ அலாட்மென்ட்-ஐ செக் செய்ய முடியும்.

கேஃபின் டெக்னாலஜிஸ்

முதலில் https://ipostatus.kfintech.com/ என்ற இணைய தளத்திற்கு செல்லுங்கள், இதில் ஐபிஓ அலாட்மென்ட் ஸ்டேட்டஸ் பக்கத்திற்குச் செல்லவும். இதில் ஜியோ பிளாட்பார்ம்ஸ் ஐபிஓ-வை தேர்வு செய்து பான், டீமேட் கணக்கு எண் ஆகியவற்றைக் கொடுக்கவும். captcha code கொடுத்து சப்மிட் என்ற பட்டனை தட்டினால் போது உங்களுடைய அலாட்மென்ட் ஸ்டேட்டஸ் தெரிய வரும்.

பிஎஸ்ஈ

மும்பை பங்குச்சந்தையின் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று ஐபிஓ அலாட்மென்ட் ஸ்டேட்டஸ் பக்கத்திற்குச் செலவும். இங்கு இஸ்யூ டைப் என்ற ஆப்ஷனில் ஈக்விட்டி என்பதைத் தேர்வு செய்யவும். அதன் பின்பு ஜியோ பிளாட்பார்ம்ஸ்-ஐ தேர்வு செய்து பான் எண் கொடுத்தால் போதுமானது. ஐபிஓ அலாட்மென்ட் விபரத்தை தெரிந்துகொள்ள முடியும்.

என்எஸ்ஈ தளத்திலும் கிட்டத்தட்ட இதை முறை தான், ஐபிஓ அலாட்மென்ட் ஸ்டேட்டஸ் பக்கத்திற்கு சென்று அடுத்தடுத்த ஸ்டெப்-களை பாலோ செய்யவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+