ஜியோ ஐபிஓ தான் இந்தியாவில் பரபரப்பாக பேசப்படும் ஒரு விஷயம். மிகவும் எதிர்பார்ப்புடன் ஜியோ பங்குகள் பட்டியலிடப்பட்ட நிலையில் இந்திய பங்கு சந்தையில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமம் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் பங்குகள் பட்டியலிடப்பட்டு 21% லாபத்தை முதலீட்டாளர்களுக்கு பெற்று தந்தது. ஜியோ ஐபிஓ மூலம் முகேஷ் அம்பானிக்கு மிகப்பெரிய ஜாக்பாட் கிடைத்துள்ளது.
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ வெளியீட்டில் ஒரு பங்கு விலை 1,119 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், சந்தையில் வர்த்தகம் தொடங்கியபோது 21% முதல் 21.36% பிரீமியத்துடன் சுமார் 1,358 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டது. இதனை அடுத்து ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு 12.50 லட்சம் கோடி ரூபாயை எட்டியது.

ஜியோவின் போட்டி டெலிகாம் நிறுவனமான பாரதி ஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது அதிக மதிப்புமிக்க நிறுவனமாக ஜியோ உருவெடுத்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஆகியவற்றின் கூட்டு சந்தை மதிப்புடன் சேர்த்து, ரிலையன்ஸ் குழுமத்தின் ஒட்டுமொத்த மதிப்பு 30 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளது. இந்தியாவின் மற்ற எந்தவொரு கார்ப்பரேட் குழுமத்தின் மதிப்பை விடவும் இது அதிகம்.
டாடா குழுமம் தான் மொத்த சந்தை மதிப்பில் முதலிடத்தில் இருந்தது., ஆனால் அதன் மதிப்பு தற்போது 25 லட்சம் கோடியாக சரிந்திவிட்ட நிலையில் ரிலையன்ஸ் குழுமம் அந்த இடத்தை பிடித்துவிட்டது. இதன் மூலம் முகேஷ் அம்பானிக்கு மாபெரும் ஜாக்பாட் அடித்துள்ளது.
முன்னதாக மும்பையில் நடைபெற்ற இந்த வரலாற்று சிறப்புமிக்க Bell-ringing விழாவில், ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானியுடன் மனைவி நீதா அம்பானி, மகன் ஆகாஷ் அம்பானி, மகள் இஷா அம்பானி மற்றும் ஆனந்த் அம்பானி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
#WATCH | Reliance Industries Limited Chairman and Managing Director Mukesh Ambani gets emotional as Reliance Industries Executive Director Anant Ambani remembers his grandfather's contributions and Jio's journey in empowering India digitally(Video source: Jio Platforms) https://t.co/7gV886gxlA
— ANI (@ANI) October 28, 2026
வர்த்தகம் தொடங்குவதற்கு முன்பு உரையாற்றிய ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிர்வாக இயக்குநர் ஆகாஷ் அம்பானி இது மிகப்பெரிய தொடக்க புள்ளி என கூறினார். இஷா அம்பானி உரையாற்றிய போது 1977ஆம் ஆண்டு ரிலையன்ஸ் பட்டியலிடப்பட்ட போது தனது தந்தை எப்படி கடினமாக உழைத்தார் என்பதை நினைவு கூர்ந்தார். இதனை கேட்டு முகேஷ் அம்பானி கண் கலங்கினார். மும்பையில் நடந்த இந்த நிகழ்வின் வீடியோ சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
ஜியோ பிளாட்பார்ம்ஸ் ஐபிஓ மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் பங்குச்சந்தையில் இறங்கியது. அந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பாசிடிவாகவே சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஜியோ ஐபிஓவில் பங்கு கிடைக்காத பலரும் இப்போதாவது பங்கினை வாங்கவேண்டும் என போட்டி போடுவதை பங்குச்சந்தையில் காண முடிகிறது. இந்நிலையில் பல்வேறு தரகு நிறுவனங்களும் ஜியோ பங்குகளை வாங்கலாம் என பரிந்துரை செய்கின்றன.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

