Jio IPO: 24 மணிநேரத்தில் நடத்த மேஜிக்.. பங்கு விலை எவ்வளவு உயரும்..?

இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ வெளியிட்டு பெரும் வரவேற்புடன் அடுத்தடுத்து சாதனை படைத்து வரும் ஜியோ ஐபிஓ-வில் 2வது நாள் முடிவில் 5.4 மடங்கு அதிக முதலீட்டு விருப்பம் குவிந்த நிலையில், 3வது நாள் முடிவில் யாரும் எதிர்பார்க்காத 22.19 மடங்க அதிக பங்குகளுக்கு முதலீட்டு விருப்பம் குவிந்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஜியோ ஐபிஓ மூலம் சுமார் 19,75,25,934 கோடி பங்குகள் விற்கக் கதவுகள் திறக்கப்பட்டது, அக்டோபர் 23ஆம் தேதி உடன் முடிந்த இந்த ஐபிஓ-வில் சுமார் 4,21,87,71,852 பங்குகளுக்கான முதலீட்டு விருப்பம் குவிந்துள்ளது.

Jio IPO: 24 மணிநேரத்தில் நடத்த மேஜிக்.. பங்கு விலை எவ்வளவு உயரும்..?

இதில் முக்கியமாக ரீடைல் முதலீட்டாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட 8,50,37,326 பங்குகளுக்கு 2.76 மடங்கு அதிக மதிப்புக்கான விண்ணப்பங்கள் குவிந்தது மட்டும் அல்லாமல் முதல் முறையாக 1 கோடி விருப்பங்கள் (1,02,77,586) தெரிவிக்கப்பட்டு உள்ளது முக்கியமான சாதனையாக உள்ளது.

அடுத்தாக QIB பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கு சுமார் 67.15 மடங்கு அதிக முதலீடுகள் குவிந்துள்ளது, ஆங்கர் பிரிவில் முதலீட்டு வாய்ப்பை பெற முடியாத நபர்கள் இப்பிரிவின் மூலம் பெரும் தொகையை முதலீடு செய்துள்ளனர். ஆங்கர் முதலீட்டுச் சுற்றிலேயே ஜியோ ஐபிஓ பெரும் வரவேற்பைப் பெற்றது.

Also Read

பங்கு விலை எவ்வளவு உயரும்..?

தற்போது ஜியோ பிளாட்பார்ம்ஸ்-க்கான கிரே மார்க் ப்ரீமியம் விலை 253 ரூபாயாக உள்ளது, இது ஜியோ ஐபிஓ விலையில் அப்பர் லிமிட் விலையான 1119 ரூபாய் அளவீட்டை ஒப்பிடுகையில் தற்போது 1372 ரூபாய் அளவை தொட்டு உள்ளது. இதன் மூலம் ஜியோ பங்குகள் பட்டியலிடும் போது 22.61 சதவீத ப்ரீமியம் விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது ஜியோ ஐபிஓ-வில் முதலீடு செய்த அனைவருக்கும் முதல் நாளிலேயே 22 சதவீத லாபத்தைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோ நிர்வாகம் ஐபிஓ முதலீட்டாளர்களுக்கான அலாட்மெண்ட் விபரத்தை அக்டோபர் 26ஆம் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அலாட்மெண்ட் ஸ்டேட்டஸ்-ஐ பிஎஸ்ஈ, என்எஸ்ஈ தளத்தில் செக் செய்துகொள்ள முடியும்.

பிஎஸ்ஈ தளத்தில் https://www.bseindia.com/investors/appli_check இந்த இணைய முகவரிக்கு சென்று, பட்டியலில் இருக்கும் ஜியோ நிறுவனத்தைச் செய்யுங்கள். இதன் பின்பு பான் எண் மூலம் சரிபார்க்கும் வசதியை கொடுத்த பின்பு தேவையான விபரங்களைக் கொடுத்தால் போதும், அலாட்மெண்ட் ஸ்டேட்டஸ் தெரிந்துகொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+