Jio-வின் ராஜதந்திரம்.. ஐபிஓ வெளியிட்ட கையோடு கட்டண உயர்வுக்கு திட்டம் போடும் அம்பானி குடும்பம்?

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாகவும், நாட்டின் 2வது அதிக மதிப்புடைய நிறுவனம் என்ற மகுடத்தை வைத்திருக்கும் ஜியோ, நேற்று ஐபிஓ வெளியிட்டு 2வது நாளிலும் பங்கு விலை அதிரடியாக உயர்ந்து 1490 ரூபாய் அளவீட்டைத் தொட்டு முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அள்ளிகொடுத்து வருகிறது.

ஜியோ-வின் அறிமுகத்திற்கு முன்பு இந்தியாவில் 12க்கும் அதிகமான டெலிகாம் நிறுவனங்கள் இருந்தது, ஆனால் ஜியோவின் அதிவேக 4ஜி சேவை அறிமுகத்திற்குப் பின்பு சந்தையில் தற்போது 3 தனியார் நிறுவனமும், 1 பொதுத்துறை நிறுவனம் என்ற சிறிய கட்டமைப்பாக மாறி போட்டி குறைந்து, ஆதிக்கம் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. அதிக வாடிக்கையாளர்கள், அதிக இன்டர்நெட் டேட்டா வர்த்தகம் கொண்டு டெலிகாம் சந்தையில் அசைக்க முடியாத சக்தியாக இருக்கும் காரணத்தாலேயே ஜியோ ஐபிஓ மாபெரும் வெற்றி அடைந்தது.

Jio-வின் ராஜதந்திரம்.. ஐபிஓ வெளியிட்ட கையோடு கட்டண உயர்வுக்கு திட்டம் போடும் அம்பானி குடும்பம்?

இந்த நிலையில் மக்கள் மத்தியில் இருக்கும் முக்கியமான கேள்வி ஜியோ ஐபிஓ வெற்றிக்குப் பின்பு டெலிகாம் சேவை கட்டணத்தை உயர்த்துமா..? என்பது தான்.

ஜியோ, ஏர்டெல் என எந்த டெலிகாம் நிறுவனத்தை எடுத்துக்கொண்டாலும் அதன் நிதியியல் திறனை அளவிடுவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது அதன் வாடிக்கையாளர்களிடம் இருந்து எவ்வளவு வருமானத்தை ஈட்டுகிறது என்பதில் தான்.

அந்த வகையில் மோதிலால் ஆஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி மார்ச் 2027ல் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் தனது மொபைல் சேவை கட்டணங்களை 15 சதவீதம் வரையில் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிவித்துள்ளது.

Also Read

மேலும் கட்டண உயர்வு, புதிய வாடிக்கையாளர் இணைப்பு ஆகியவை ஜியோ நிறுவனத்தின் வருமானத்தை உயர்த்தும் என்றும், இதன் வாயிலாக 2026- 2029 வரையிலான காலகட்டத்தில் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ்-ன் வருமானம் 14%, 15%, 20% வரையில் உயரும் என கணித்துள்ளது.

இதேபோல் ஜியோவின் அடுத்தகட்ட வளர்ச்சியில் பெரும் பகுதி ஹோம் பிராட்பேன்ட் வாயிலாக வரும் எனவும் தனது அறிக்கையில் மோதிலால் ஆஸ்வால் கணித்துள்ளது.

ஜியோ தற்போது பைபர், ஏஐ பைபர் சேவைகளை அளித்து வரும் நிலையில், 2026- 2029 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் இருக்கும் மொத்த ஹோம் பிராட்பேண்ட் இணைப்பில் ஜியோ மட்டுமே 73 சதவீத பங்கீட்டைப் பிடிக்கும் எனக் கணித்துள்ளது மோதிலால் ஆஸ்வால்.

Recommended For You

மேலும் ஹோம் பிராட்பேண்ட் பிரிவில் 5 கோடி வாடிக்கையாளர்களையும், 27% CAGR வளர்ச்சியில் வருமானத்தையும் இக்காலகட்டத்தில் பெறும் எனத் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் ஜியோ வாடிக்கையாளர்கள் கட்டண உயர்வுக்கும், ஐியோ பங்கு முதலீட்டாளர்கள் அதிகப்படியான லாபத்திற்கும் தயாராக இருங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+