JIO IPO பணத்தை முகேஷ் அம்பானி என்ன செய்ய போறாரு தெரியுமா..? மொத்தமாக இதுல தான் செலவு பண்ண பிளான்..!

இந்திய முதலீட்டாளர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ இன்று ரீடைல் முதலீட்டாளர்களுக்குத் திறக்கப்பட்டு உள்ளது. ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கே 30 மடங்கு அதிக முதலீடுகள் குவிந்த நிலையில் ரீடைல் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கு எத்தகைய வரவேற்பு இருக்கும் என்பது உண்மையிலேயே பில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

ஜியோ ஐபிஓ ரீடைல் முதலீட்டாளர்களுக்கான கதவுகள் அக்டோபர் 21 -23 வரையில் திறக்கப்படும் வேளையில் ஒரு பங்கு விலை 1065 - 1119 ரூபாய் விலையில் ஒரு லாட்டுக்கு 12 பங்குகள் வீதம் ஒரு லாட் 13,428 ரூபாய் மதிப்பில் சந்தைக்கு வருகிறது. இந்த ஜியோ இந்க ஐபிஓ-வில் சுமார் 30,213 கோடி ரூபாய் வரையிலான தொகையைப் பெற உள்ளது.

இத்தகைய பெரும் தொகையை வைத்து முகேஷ் அம்பானி என்ன செய்யப்போகிறார் என்பது தான் முக்கியமான கேள்வி.

JIO IPO பணத்தை முகேஷ் அம்பானி என்ன செய்ய போறாரு தெரியுமா..? மொத்தமாக இதுல தான் செலவு பண்ண பிளான்..!

ஜியோ நிறுவனம் கடந்த 2-3 வருடங்களாகத் தனது கடன் அளவை வேகமாக குறைக்க வேண்டும் என்பதில் படு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது, உதாரணமாக மார்ச் 2024ல் 48,440 கோடி ரூபாயாக இருந்த கடன் 2026 மார்ச் மாதத்தில் 27,579 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.

இந்த 30000 கோடி ரூபாய் ஐபிஓ தொகையில் சுமார் 27500 கோடி ரூபாயைத் தனது ஆப்ரேட்டிங் கிளை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்திடம் கடனை அடைக்கப் பயன்படுத்த உள்ளது. இந்த ஐபிஓ மூலம் வரும் தொகை தொடர்ந்து நிறுவனத்திற்குள்ளேயே இருந்தாலும் அவை கடனை அடைக்கப் பயன்படுவதால் நிறுவனத்திற்கு பெரும் சுமை குறையும்.

Also Read

ஜியோ பிளாட்பார்ம்ஸ் கீழ் இயங்கும் ஒரு ஆப்ரேட்டிங் நிறுவனம் தான் இந்த ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம். ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சுமார் 66.43 சதவீத பங்குகளை வைத்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்தின் தலைவராக ஆகாஷ் அம்பானி உள்ளார், ஜியோ பிளாட்பார்ம்ஸ் சிஇஓ-வாக கிரண் தாம்ஸ் உள்ளார். சரி கடனை குறைப்பதால் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு என்ன நன்மை..?

ஜியோ நிறுவனம் தற்போது நாடு முழுவதும் சுமார் 53 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு மொபைல் சேவைகளை வழங்கி வருகிறது. இத்தகைய சேவையை வழங்க மிகப்பெரிய டெலிகாம் கட்டமைப்பு தேவை.

இந்த டெலிகாம் நெட்வொர்க்கை உருவாக்கவும், விரிவுபடுத்தவும் ஜியோ அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது, இதற்காக அதிகளவில் கடனும் வாங்குகிறது. வாங்கிய கடனுக்கு ஒவ்வொரு ஆண்டும் வட்டி செலுத்த வேண்டும் என்பதால் நீண்ட காலத்தில் இது பெரும் நிதி சுமையாக மாறும்.

Recommended For You

இத்தகைய சூழ்நிலையில் கடன் சுமையின் காரணமாக விரிவாக்கம் பணிகள், புதிய சேவைகள் அறிமுகம், அதிவேக இண்டர்நெட் போன்றவை தாமதமாகும். தற்போது கடன் சுமை குறையும் போது, இந்த 27500 கோடி ரூபாய் நேரடியாக டெலிகாம் பிரிவான ஜியோ இன்போகாம் நிறுவனத்திற்குச் செல்லும் போதும் லாப அளவுகள் அதிகரிக்கும், சேவை விரிவாக்கத்தை வேகப்படுத்த முடியும்.

அனைத்தையும் விட முக்கியமாக டெலிகாம் சேவை நிறுவனங்கள் ஒவ்வொரு முறையும் செலவுகள் அதிகரிக்கும், லாப அளவுகள் குறையும் போதும் டெலிகாம் கட்டணத்தை உயர்த்தி செலவுகளைக் கட்டுப்படுத்துகிறது.

தற்போது கடன் என்ற ஒரு விஷயம் குறையும் காரணத்தால் கட்டண உயர்வில் இருந்து சில காலம் நிவாரணம் கிடைக்கும். இதேபோல் ஜியோ நீண்ட காலமாக ஐபிஓ வெளியிடும் காரணத்தால் கட்டணத்தை உயர்த்தாமல் வைத்திருப்பதும் கவனிக்க வேண்டிய ஒரு விஷயமாகும்.

இதனால் இந்த ஐபிஓ மூலம் கிடைக்கும் தொகை மூலம் உடனடியாக சேவை திறன் அதிகரிக்கும், டெலிகாம் சேவை கட்டணம் உயர்த்துவதை ஒத்திவைக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த முடியாது, வாய்ப்புகள் இருப்பதையும் மறுக்க முடியாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+