ஜியோ என்ன பெரிய அப்பாடக்கரா..? வாயடைந்து போன சீன பெரும் தலைகள்..!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொருளாதார வளர்ச்சியிலும், ஆயுத பலத்திலும், தொழில்நுட்ப வளர்ச்சியிலும் அமெரிக்காவுடன் போட்டிப்போடும் சீனாவின் இரண்டு மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனம் என்றால் அது டென்சென்ட் மற்றும் அலிபாபா நிறுவனங்கள் தான். சொல்லப்போனால் ஆசியாவிலேயே மிகப்பெரிய நிறுவனங்களாகத் திகழும் இந்நிறுவனங்களின் மதிப்பு தலா 600 பில்லியன் டாலர்.

இவ்வளவு பெரிய நிறுவனத்திற்கு முன் ரிலையன்ஸ் ஜியோ என்ன செய்ய முடியும்..???

அமெரிக்காவும் சீனாவும் டேஞ்சரான பகுதியில் நுழைகிறார்கள்! நிபுணர்கள் எச்சரிக்கை!அமெரிக்காவும் சீனாவும் டேஞ்சரான பகுதியில் நுழைகிறார்கள்! நிபுணர்கள் எச்சரிக்கை!

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோவின் தாய் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு முதல் கெமிக்கல், டெக்னாலஜி, ரீடைல், டெலிகாம் என உலகில் எந்த ஒரு வர்த்தகக் குழுமத்தில் இல்லாத ஒரு மிகப்பெரிய பல்வகை வர்த்தகப் பிரிவுகள் உள்ளது.

டென்சென்ட் மற்றும் அலிபாபா நிறுவனங்களை ஒப்பிடுகையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மதிப்பில் 4ல் ஒரு பங்கு தான். ஆனால் வரும் காலத்தில் ஜியோ எப்படி இருக்கும் தெரியுமா..?

 

ஜியோ Vs டென்சென்ட், அலிபாபா

ஜியோ Vs டென்சென்ட், அலிபாபா

இன்றைய நிலையில் ஜியோ-வை சில டென்சென்ட் உடனும், இன்னும் சில அலிபாபா உடனும் ஒப்பிடுகின்றனர். ஆனால் ஜியோ டென்சென்ட் மற்றும் அலிபாபா ஆகிய நிறுவனங்களின் மொத்த கலவை.

சீனாவில் டென்சென்ட் மற்றும் அலிபாபா உருவாக்கி ஒரு டிஜிட்டல் உலகை இந்தியாவில் உருவாக்கும் சக்தியும் அதற்கான சரியான தளத்தையும் ஜியோ வைத்துள்ளது. அடுத்த 3 முதல் 5 வருடத்தில் ரிலையன்ஸ் சுமார் 500 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டு மிகப்பெரிய அளவிலான வர்த்தகத்தைச் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டியமைக்கப் போகிறது எனப் பாங்க் ஆஃப் ஆமெரிக்கா தெரிவித்துள்ளது.

 

அலிபாபா நிறுவனங்கள்
 

அலிபாபா நிறுவனங்கள்

ஈகாமர்ஸ்: டிமால் , அலிஎக்ஸ்பிரஸ், அலிபாபா.காம், 1888.காம், Taobao
மார்கெட்டிங்: அலிமாமா.காம்
கிளவுட்/டெக்: அலிகிளவுட்
பேமெண்ட்ஸ்: Ant பைனான்சியல், அலிபே

ஜியோ நிறுவனங்கள்

ஜியோ நிறுவனங்கள்

ஈகாமர்ஸ்: ஜியோமார்ட்
மார்கெட்டிங்: ஜியோ Ads
கிளவுட்/டெக்: ஜியோ செக்யூரிட்டி, ஜியோ ஸ்மார்ட் செக்யூரிட்டி, ஜியோ கிளவுட், ஜியோ பிரவுசர், ஜியோ நெட்
பேமெண்ட்ஸ்: ஜியோ POS, ஜியோ Money

டென்சென்ட் vs ஜியோ

டென்சென்ட் vs ஜியோ

இதபோல் டென்சென்ட் நிறுவனத்திடம் இருக்கும் அனைத்து விதமான சேவைகளும் இணையான சேவையை ஜியோ வைத்துள்ளது. அதில குறிப்பாக ஜியோ நியூஸ், ஜியோ சாட், ஜியோ டிவி, ஜியோ கேம்ஸ், ஜியோ ஸ்டோர், ஜியோ கால், ஜியோ ஹெல்த்ஹப், ஜியோ சினிமா, ஜியோ சாவன், ஜியோ ஜிஎஸ்டி, ஜியோ ஸ்விட்ச்.

நுகர்வோர்

நுகர்வோர்

ஒரு வீட்டில் வர்த்தக ரீதியாக, பொழுதுபோக்கு ரீதியாகச் செய்யப்படும் அனைத்து விஷயங்களும் ஜியோ நிறுவனத்தின் வாயிலாகத் தான் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கும் ஆதிக்கத்தையும் அடைய ஜியோ திட்டமிடுகிறது. இதுமிகப்பெரிய வர்த்தகத்தையும் லாபத்தை ஈட்டித்தரும்.

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்

இதுமட்டும் அல்லாமல் எதிர்கால வளர்ச்சிக்குத் தற்போது கையில் இருக்கும் நிறுவனங்கள் மற்றும் துறைகள் அல்லாமல் புதிய துறையில் வர்த்தகத்தை மேம்படுத்தவும், விரிவாக்கம் செய்யவும் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.

Jio Saavn - Music, Embibe - Edtech, Haptik - AI, Fynd - Ecommerce, Now floats - SaaS, Radisys - Open architecture business models, Reverie - Cloud-based language as a service platform, SankhyaSutra Labs - Software simulation services, Netradyne - Automotive AI, Asteria Aerospace - Robotics, FunToot - Edtech, EasyGov - SaaS platform, Kare Expert - Healthtech, Tesseract - AR/VR, NewJ - Media

 

கூட்டணி

கூட்டணி

இவை அனைத்தையும் உலகத் தர சேவையில் மேம்படுத்துவதற்கும், விரைவாகச் சேவைகளை இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்வதற்கும் தேவையான டிஜிட்டல் கட்டமைப்புகளை ஜியோ பேஸ்புக், கூகிள், மைக்ரோசாப்ட் ஆகிய உலகின் மிகப்பெரிய டெக் ஜாம்பவான் கூட்டணி வைத்துள்ளது.

டெலிகாம்

டெலிகாம்

உலகில் எந்த ஒரு டெலிகாம் நிறுவனத்திடமும் இல்லாத ஒரு தளத்தை ஜியோ உருவாக்கி வருகிறது. ஆம் "சூப்பர் ஆப்", செய்திகள் முதல் இசை வரையில், கேம்ஸ் முதல் திரைப்படம் வரை என அனைத்து சேவைகளும் ஓரே இடத்தில் கிடைக்கும் ஒரு அற்புதத்தை ஜியோ உருவாக்கி வருகிறது.

சீனா நிறுவனங்கள்

சீனா நிறுவனங்கள்


முகேஷ் அம்பானியின் திட்டங்கள் அனைத்தும் திட்டமிட்டபடி சாத்தியமானால் சீனாவின் டென்சென்ட் மற்றும் அலிபாபா நிறுவனங்களை விடவும் மிகப்பெரிய நிறுவனமாக ஜியோ உருவெடுக்கும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.

இப்போ சொல்லுங்க யாரு பெரிய அப்பாடக்கர்.. சீனாவின் டென்சென்ட், அலிபாபா-வா, இல்லை நம்ம ஊர் ஜியோ-வா..?

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jio is a combo of Alibaba and tencent

Jio is a combo of Alibaba and tencent
Story first published: Monday, July 20, 2020, 18:24 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X