சில முன்னணி டெலிகாம் நிறுவனங்களின் பட்டியலில் முக்கிய இடத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் உள்ளது. பேசிக் மாடல் போன்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை 4ஜி மொபைலுக்கு மாற்றும் விதமாக தற்போது ஜியோ நிறுவனம் புதிய மொபைல் போனை வெளியிட்டுள்ளது. அதுவும் மிகவும் மலிவான விலையில்.. இந்தப் பதிவில் இந்த மொபைலின் அம்சங்கள் குறித்தும் விலை குறித்தும் விரிவாகப் பார்ப்போம்.
ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோசாவ்ன், ஜியோபே (UPI), ஜியோ சாட் மற்றும் ஜியோ போட்டோஸ் போன்ற ஜியோ அப்ளிகேஷன்களை கொண்ட ஜியோ பாரத் ஜே1 4ஜி (JioBharat J1 4G) மொபைலை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த 4G போனில் இந்தி, மராத்தி, குஜராத்தி மற்றும் பங்களா உள்ளிட்ட 23 மொழிகளுக்கான கீபேட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜியோ பாரத் J1 4G மொபைல் ரீசார்ஜ் திட்டங்கள்: ரூ. 123 (28 நாட்கள்) முதல் ரூ. 1234 (336 நாட்கள்) வரை ஜியோ பாரத் J1 4G மொபைலுக்கு ரீசார்ஜ் திட்டங்கள் கிடைக்கிறது. அனைத்து ரீசார்ஜ் திட்டங்களிலும், ஜியோ ஒரு நாளைக்கு 0.5 GB டேட்டா, அன்லிமிடெட் கால் வசதி மற்றும் 28 நாட்களுக்கு 300 SMS-களை வழங்குகிறது. அதோடு, அனைத்து திட்டங்களும் ஜியோ சவான், ஜியோ சினிமா மற்றும் ஜியோ டிவி சேவைகளுக்கான சந்தாவுடன் வழங்கப்படுகின்றன.
ஜியோ பாரத் J1 4G விலை: ஜியோ பாரத் J1 4G மொபைல் அமேசானில் 1,799 ரூபாய்க்கு கிடைக்கிறது. இந்த 4G போன் டார்க் சாம்பல் நிறத்தில் வழங்கப்படுகிறது.
ஜியோ பாரத் J1 4G மொபைலின் அம்சங்கள்: இந்த போனில் 2.8-இன்ச் டச் இல்லாத திரை உள்ளது. 2,500 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த போன் ThreadX RTOS-ஐ அடிப்படையாகக் கொண்டது.
இந்த போனில் 128GB ஸ்டோரேஜ்க்காக மைக்ரோ SD கார்டு வழங்கப்பட்டுள்ளது. அடுத்ததாக ஒரே ஒரு நானோ சிம் ஸ்லாட்டும் உள்ளது. போனின் பின்புறத்தில் ஒரு கேமரா உள்ளது. ஆனால் துல்லியமான கேமரா விவரக்குறிப்புகள் ஜியோவால் இன்னும் விரிவாக விளக்கப்படவில்லை. இந்த கேமரா மூலமாகவே போன் UPI QR கோடு பயன்படுத்தி ஆன்லைன் பேமெண்ட் செய்யலாம். ஹேண்ட்செட் 135 x 56 x 16 mm அளவில் உள்ளது மற்றும் இந்த மொபைல் 122 கிராம் எடை கொண்டது.


Click it and Unblock the Notifications