ரிலையன்ஸ் ஜியோ சிம் வைத்துள்ளீர்களா.. உங்க பணத்தை சேமிக்க இதுதான் பெஸ்ட் ஐடியா..!!

JIO Budget Recharge Plans: இந்திய டெலிகாம் சந்தையில் டேட்டா வார் முடிந்து இப்போது ஏஐ வார் துவங்கியுள்ளது, நாட்டில் அனைத்து டெலிகாம் சேவை நிறுவனங்களும் தற்போதும் வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவை அளிக்கவும், வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ளவும் புது புது திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.

2 வருடங்களுக்கு முன்பு டெலிகாம் நிறுவனங்கள் மத்தியில் யார் அதிகமாக இண்டர்நெட் டேட்டாவை குறைந்த விலைக்கு கொடுக்கிறார்கள் என்பதில் தான் போட்டி இருந்தது. ஆனால் தற்போது ஓடிடி, ஏஐ சேவைகள் என பலவும் இப்போட்டியில் இணைந்துள்ளது. இதனால் மக்கள் எந்த நெட்வொர்க்கில் எந்த திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

ரிலையன்ஸ் ஜியோ சிம் வைத்துள்ளீர்களா.. உங்க பணத்தை சேமிக்க இதுதான் பெஸ்ட் ஐடியா..!!

இந்த நிலையில் இந்திய டெலிகாம் சந்தையில் பெரும் வாடிக்கையாளர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் ரிலையன்ஸ் ஜியோ தனது நீண்ட வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் பிளான்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டிய சிரமத்தை தவிர்த்து, 84 நாட்கள் அல்லது அதற்கு மேல் செல்லுபடியாகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த பிளான்களில் அனைத்து தரப்பு மக்களின் சேவையையும், பயன்பாட்டையும் கருத்தில் கொண்டு தினசரி டேட்டா, வரம்பில்லா அழைப்பு, SMS மற்றும் OTT சந்தாக்களை ஒருங்கிணைத்து வழங்குகின்றன. கூடுதலாக, Google Gemini Pro போன்ற AI சேவைகளும் இலவசமாகக் கிடைக்கின்றன.

இவை வெறும் டெலிகாம் சேவை பயன்படுத்தும் முடிவை தாண்டி உங்கள் பட்ஜெட்-ல் முக்கிய தொகையை ஒவ்வொரு மாதமும் எடுக்கும் ஒரு முடிவு என்பதால் உஷார தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.குறிப்பாக, Netflix, JioHotstar போன்ற OTTகளை விரும்புவோருக்கு சிறந்த வாய்ப்புகளை தற்போது முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துள்ளது.

Netflix Premium உடன் ரூ.1799 பிளான்
OTT ரசிகர்களுக்கு சிறந்தது திட்டம் இது. ரூ.1799 பிளான் 84 நாட்கள் செல்லுபடியுடன் 3GB தினசரி டேட்டா, வரம்பில்லா அழைப்பு மற்றும் தினமும் 100 SMS வழங்குகிறது. மேலுூம் Netflix Basic சந்தா, 3 மாத JioHotstar சப்ஸ்கிரிப்ஷன் மற்றும் 18 மாத Google Gemini Pro சேவையும் இலவசமாகக் கிடைக்கிறது. உயர் தர ஸ்ட்ரீமிங் மற்றும் AI உதவியை விரும்புவோருக்கு இது சிறந்த தேர்வு.

ரூ.1199 பிளான் - AI மற்றும் OTT மிக்ஸ்
84 நாட்கள் வேலிடிட்டி உடன் 3GB தினசரி டேட்டா வழங்கும் இந்த பிளான் Netflix இல்லாவிட்டாலும் JioHotstar, JioTV, JioAICloud போன்றவற்றை இலவசமாக கொடுக்கிறது ஜியோ. இதோடு 18 மாத Google Gemini Pro சலுகை அளிக்கிறது. செலவு குறைவாக அதிக டேட்டா மற்றும் AI பயன்பாட்டை விரும்புவோருக்கு ஏற்றது.

ஏஆர் ரகுமான், யுவன், இளையராஜா பேன்ஸ்-க்கு
84 நாட்கள் வேலிடிட்டி உடன் 1.5GB தினசரி டேட்டா, வரம்பில்லா அழைப்பு மற்றும் 100 SMS இதில் உள்ளது. JioSaavn Pro சந்தா அட்ஃப்ரீ மியூசிக் ஸ்ட்ரீமிங்கை வழங்குகிறது. Google Gemini Pro சலுகையும் இடம்பெற்றுள்ளது. பட்ஜெட்டில் இசை மற்றும் அடிப்படை டேட்டா தேவைப்படுவோருக்கு இந்த ரூ.889 திட்டம் சிறந்தது.

90 நாட்கள் வேலிடிட்டி
இதே 899 ரூபாய் திட்டம் என்றாலும் 6 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி உடன் 90 நாட்கள் உடன் வரும் இத்திட்டத்தில் 2GB தினசரி டேட்டா மற்றும் கூடுதலாக 20GB வழங்கப்படுகிறது. JioTV, JioAICloud, JioHotstar ஆகியவை பயன்படுத்தலாம். Google Gemini Pro சலுகை உள்ளது. நீண்ட காலம் வெளியில் இருப்போருக்கு மதிப்புமிக்க தேர்வு.

ரூ.859 டெய்லி யூஸர்ஸ் பிளான்
84 நாட்கள் செல்லுபடியுடன் 2GB தினசரி டேட்டா, 3 மாத JioHotstar, 100 SMS மற்றும் வரம்பில்லா அழைப்பு உள்ளது. Google Gemini Pro மற்றும் 50GB JioAICloud ஸ்டோரேஜ் கிடைக்கிறது. அன்றாட இணைய பயன்பாட்டுக்கு ஏற்ற பிளான் இது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+