உலகின் மிகப்பெரிய OTT தளமான நெட்பிளிக்ஸ் சமீபத்தில் பாஸ்வோர்டு ஷேரிங் சேவையை ரத்து செய்துள்ளது, இதன் மூலம் குடும்ப திட்டம் வாங்கினாலும் லொகேஷன் அடிப்படையில் இயங்கும் காரணத்தால் இத்திட்டத்தை முழுமையாக பயன்படுத்த முடியவில்லை, குறிப்பாக பாஸ்வோர்டு ஷேரிங் சேவையில் டீவி-யில் நெட்பிளிக்ஸ் பார்ப்பவர்களுக்கு பெரும் தொல்லையாக மாறியுள்ளது.
இந்த நிலையில் நெட்பிளிகஸ் தனது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும், தொடர்ந்து வருமானம் ஈட்ட வேண்டும் என்ற இலக்குடன் இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் சேவை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ உடன் நெட்பிளிக்ஸ் இணைந்து சிறப்பு சேவைகளை அளிக்க உள்ளது.

ஜியோ + நெட்பிளிக்ஸ் புதிய ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டம் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது அனைவருக்கும் தெரியும். இத்திட்டம் மூலம் உண்மையிலேயே மக்களுக்கு பலன் அளிக்கிறதா..? இதில் இருக்கும் உண்மை என்ன..?
ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே 999 ரூபாயில் 84 நாள் வேலிடிட்டி உடன் ஒரு நாளுக்கு 3 ஜிபி டேட்டா அளித்து வருகிறது. இதேபோல் 789 ரூராயில் 84 நாள் வேலிட்டி உடன் ஒரு நாளுக்கு 2 ஜிபி டேட்டா அளித்து வருகிறது. இவ்விரு திட்டத்திலும் ஜியோ டிவி, ஜியோ சினிமா ஆகியவை உள்ளது.
இந்த திட்டத்தை மேம்படுத்து அதே 84 நாள் வேலிடிட்டி உடன் ஒரு நாளுக்கு 3 ஜிபி டேட்டா திட்டத்தில் நெட்பிளிக்ஸ் பேசிக் திட்டம் இணைத்து 1499 ரூபாய்க்கு கொடுக்கிறது. மற்றொரு திட்டமான 84 நாள் வேலிட்டி உடன் ஒரு நாளுக்கு 2 ஜிபி டேட்டா நெட்பிளிக்ஸ் மொபைல் திட்டம் இணைத்து 1099 ரூபாய்க்கு கொடுக்கிறது.
நெட்பிளிக்ஸ் தளத்தில் இதை சப்ஸ்கிரைப் செய்தால் பேசிக் திட்டத்திற்கு மாதம் 199 ரூபாய் வசூலிக்கப்படுகிறது, இதுவே நெட்பிளிக்ஸ் மொபைல் திட்டத்திற்கு மாதம் 149 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
84 நாள் கிட்டத்தட்ட 3 மாதம் கணக்கு வைத்திக்கொண்டால் 3 ஜிபி டேட்டா திட்டத்தில் நெட்பிளிக்ஸ் பேசிக் திட்டத்தின் மூலம் 100 ரூபாய் சேமிக்க முடியும். இதேபோல் 2 ஜிபி டேட்டா திட்டத்தில் 140 ரூபாய் சேமிக்க முடியும்.


Click it and Unblock the Notifications