புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் சேவை நிறுவனமாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ புதிதாக மூன்று ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து வாடிக்கையாளர்களையும் கவரும் வண்ணம் 3 பிரிவில் 3 ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது.
முதல் திட்டமாக ஜியோ நீண்ட கால வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக இன்றைய இண்டர்நெட் பயன்பாட்டை கணக்கில் வைத்து ஆண்டு முழுவதும் செல்லுபடியாகும் வருடாந்திர திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

அதை அடுத்த மாதாந்திர பொழுதுபோக்கு ரீசார்ஜ் திட்டம் மற்றும் ஃப்ளெக்ஸி ரீசார்ஜ் என இரு சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டங்கள் அன்லிமிடெட் அழைப்பு, டேட்டா வசதிகளுடன் கூகுள் ஜெமினி ப்ரோ AI சப்ஸ்கிரிப்ஷனும் இலவசமாக வழங்குகின்றன. இது ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் ஆக அமைந்துள்ளது.
ஹீரோ ஆண்டு ரீசார்ஜ் திட்டம்:
ஜியோவின் ஹீரோ வருடாந்திர ரீசார்ஜ் திட்டத்தின் விலை 3599 ரூபாய் 365 நாட்கள் செல்லுபடியாகும் ஒரு சிறப்பு ரீசார்ஜ் திட்டம். இதில் தினசரி 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் வசதி உள்ளது. இதன் சிறப்பம்சம் 18 மாதங்கள் கூகுள் ஜெமினி ப்ரோ AI சப்ஸ்கிரிப்ஷனை இலவசமாக வழங்குகிறது. இது AI அம்சங்களை பயன்படுத்த விரும்புவோருக்கு சிறப்பான திட்டமாக பார்க்கப்படுகிறது.
சூப்பர் செலிப்ரேஷன் திட்டம்:
பொதுபோக்கு சேவைகளை அதிகம் பயன்படுத்துவோரை டார்கெட் செய்யும் வகையில் ஒரு சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது ஜியோ. இந்த செலிப்ரேஷன் திட்டத்தின் விலை ரூ.500, இது 28 நாட்கள் செல்லுபடியாகும் திட்டமாகும்.
இதில் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி, அன்லிமிடெட் அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளது. யூடியூப் பிரீமியம், ஜியோஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ, சோனி லிவ், ஜீ5, லயன்ஸ்கேட் போன்ற பல OTT தளங்களுக்கு இலவச சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கும். இதோடு கூடுதலாக 18 மாதங்கள் கூகுள் ஜெமினி ப்ரோ சப்ஸ்கிரிப்ஷனும் கிடைக்கும்.
ஃப்ளெக்ஸி ரீசார்ஜ்:
வெறும் 103 ரூபாய்க்கு அறிவிக்கப்பட்டு உள்ள ஃப்ளெக்ஸி ரீசார்ஜ் திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டமாகும். இதில் மொத்தம் 5 ஜிபி டேட்டா கிடைக்கும். ஹிந்தி, இன்டர்நேஷனல், ரீஜினல் என மூன்று பொழுதுபோக்கு பேக்குகளில் ஒன்றை தேர்வு செய்யலாம். இவை தேர்ந்தெடுத்த OTT தளங்களை வழங்கும்.
ஏர்டெல் உடன் ஒப்பீடு
ஏர்டெல்லும் ரூ.3599 ஆண்டு திட்டத்தை வழங்குகிறது. இதில் 365 நாட்கள் செல்லுபடி, அன்லிமிடெட் அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி, தினசரி 2 ஜிபி டேட்டா உள்ளது. இதில் 12 மாதங்கள் பெர்ப்ளெக்ஸிட்டி ப்ரோ AI சந்தா இலவசம்.
ஜியோ 2.5 ஜிபி டேட்டா மற்றும் கூகுள் ஜெமினி ப்ரோ தருவதால் சற்று முன்னிலை வகிக்கிறது. தினமும் கிடைக்கும் கூடுதலான 500எம்பி டேட்டா-வை பார்க்கும் போது ஜியோ சிறப்பானதாக இருக்கும். ஆனால் இந்த தேவை ஒவ்வொரு மக்களுக்கும் மாறுப்படும், இதனால் உங்களுடைய தேவையை அறிந்து ரீசார்ஜ் திட்டத்தை தேர்வு செய்யவும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications