ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரிலையன்ஸ் ஜியோ இப்போது இரண்டு ஆண்டுகளுக்கு இலவச யூடியூப் பிரீமியம் சந்தாவை வழங்குகிறது. ஜியோ ஏர் ஃபைபர் மற்றும் ஜியோ ஃபைபர் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும். இதனை சமூக ஊடகமான எக்ஸ் மூலம் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தச் சலுகை தற்போது ஜியோ இணையதளம் மற்றும் மொபைல் செயலியில் உள்ளது.
பயனர்களின் டிஜிட்டல் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் யூடியூப் இடையேயான ஒத்துழைப்பு மூலம் இந்த நன்மை கிடைக்கிறது. உங்களுக்கு பிடித்த வீடியோவை விளம்பரங்கள் இல்லாமல் பார்க்கலாம் என்பது இதன் நன்மை. அதேபோல், வீடியோக்களை பதிவிறக்கி அதன் பிறகு, நீங்கள் விரும்பும் போது அவற்றை பார்க்கலாம். இந்த ஆஃப்லைன் வீடியோவைப் பார்க்க இண்டெர்நெட் தேவையில்லை.

அதேபோல், பேக்ரவுண்ட் விருப்பத்தையும் இங்கே பெறலாம். அதாவது மற்ற அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தும் போது நீங்கள் வீடியோக்களைப் பார்க்கலாம் மற்றும் இசையைக் கேட்கலாம். மேலும், ஸ்கிரீன் ஆஃப் செய்யப்பட்டு இருந்தாலும் யூடியூப் வீடியோக்களின் இசையை இடைவிடாது கேட்டு ரசிக்கலாம். மற்றொரு அம்சம் என்னவென்றால், நீங்கள் YouTube Music Premium சந்தாவைப் பெறுவீர்கள். 100 மில்லியனுக்கும் அதிகமான விளம்பரமில்லா பாடல்கள் இங்கே கிடைக்கின்றன. தனிப்பயனாக்கப்பட்ட பிளேலிஸ்ட்களை உருவாக்கி, உலகளாவிய தரவரிசையில் சிறந்த பாடல்களையும் கேட்க்கலாம்
இந்த சலுகை ஜியோ ஏர்ஃபைபர் மற்றும் ஜியோஃபைபர் போஸ்ட்பெய்ட் திட்டங்களில் கிடைக்கும். ரூ.888, ரூ.1,199, ரூ.1,429, ரூ.2,499 மற்றும் ரூ.3,499 திட்டங்கள் கிடைக்கின்றன. இந்தத் திட்டங்களுடன் அன்லிமிடெட் ஸ்ட்ரீமிங்கை அனுபவிக்கவும். ஜியோ ஃபைபர் ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் மூலம் அதிவேக இணையத்தை வழங்குகிறது. ஜியோ ஏர் ஃபைபர் 5ஜி தொழில்நுட்பம் மூலம் வயர்லெஸ் முறையில் அதிவேக இணையத்தையும் வழங்குகிறது.
யூடியூப் பிரீமியம் சந்தாவை எவ்வாறு செயல்படுத்துவது?: ஸ்டெப் 1 : ஜியோ ஏர்ஃபைபரில் விரும்பிய திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கவும் ஏற்கனவே உள்ள திட்டத்தில் இருந்து மேலே குறிப்பிட்டுள்ள திட்டங்களை மாற்றிக்கொள்ளலாம்.
ஸ்டெப் 2 : My Jio ஆப் அல்லது இணையதளத்தில் லாகின் செய்யலாம்.
ஸ்டெப் 3 : பக்கத்தில் காட்டப்படும் YouTube Premium பேனரை கிளிக் செய்யவும்
ஸ்டெப் 4 : உங்கள் கணக்கில் YouTube இல் உள்நுழையவும் அல்லது புதிய கணக்கை உருவாக்கவும்
ஸ்டெப் 5: அதே விவரங்களுடன் உள்நுழைந்த பிறகு JioFiber / JioAirFiber செட் டாப் பாக்ஸில் விளம்பரமில்லா வீடியோக்களை அனுபவிக்கலாம்.


Click it and Unblock the Notifications