ரீசார்ஜ் கட்டண உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சில பிரபலமான மலிவு விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை நீக்கியதற்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து கடும் விமர்சனங்களைச் சந்தித்த ஜியோ நிறுவனம், புதிய யுக்தியை கையாண்டுள்ளது. வாடிக்கையாளர்களின் கோபத்தை தணிக்கும் வகையில், ஜியோ நிறுவனம் 3 புதிய பிளான்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 'True Unlimited Upgrade' என்ற பெயரில் வெளிவந்துள்ளது. இந்தக் கட்டுரையில், இந்த புதிய திட்டங்கள் என்ன வழங்குகின்றன, யார் இந்த திட்டங்களைப் பயன்படுத்த முடியும் என்ற தகவல்களை விரிவாகக் காண்போம்.
புதிய திட்டங்கள் பயனருக்கு 5G-ஐ ஆதரிக்கும் சாதனம் இருந்தால், வரம்பற்ற 5G டேட்டாவை வழங்கும். இருப்பினும், ஜியோ ட்ரூ 5G நெட்வொர்க்குடன் இணைக்கும் போது மட்டுமே வரம்பற்ற 5G டேட்டா கிடைக்கும், மேலும் சாதனம் 5G ஐ ஆதரிக்க வேண்டும். நெட்வொர்க் 4G க்கு மாறினால், திட்டங்கள் லிமிட்டெட் டேட்டாவை வழங்கும்.

அறிமுகப்படுத்தப்பட்ட இந்த 3 பிளான்களும் ஏற்கனவே ரீசார்ஜ் திட்டங்களை பயன்படுத்திக் கொண்டு இருக்கும் பயனர்களுக்கு மட்டுமே. இவை டேட்டா பேக் போலவே செயல்படும். ஆனால் அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்கப்படுகிறது. இதை மட்டும் தனியாக பயன்படுத்த முடியாது. ஏற்கனவே ரீசார்ஜ் திட்டங்கள் இருந்தால், உங்களுக்கு அதிக டேட்டா தேவைப்படும் சமயத்தில் நீங்கள் 5ஜி பிளான்களை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
ரூ. 151 திட்டம்:
4G டேட்டா: அதிவேக 9ஜிபி டேட்டா கிடைக்கும்.
5G டேட்டா: அதிவேக அன்லிமிடெட் டேட்டா.(ஜியோ ட்ரூ 5G நெட்வொர்க்கில் 5G சாதனங்களுக்கு மட்டுமே)
ரூ. 101 திட்டம்:
4G டேட்டா: அதிவேக 6ஜிபி டேட்டா கிடைக்கும்.
5G டேட்டா: அதிவேக அன்லிமிடெட் டேட்டா (ஜியோ ட்ரூ 5G நெட்வொர்க்கில் 5G சாதனங்களுக்கு மட்டுமே)
ரூ. 51 திட்டம்:
4G டேட்டா: அதிவேக 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
5G டேட்டா: அதிவேக அன்லிமிடெட் டேட்டா (ஜியோ ட்ரூ 5G நெட்வொர்க்கில் 5G சாதனங்களுக்கு மட்டுமே)
அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்கும் ரூ.1559 திட்டம் மற்றும் ரூ.359 திட்டம் போன்ற சில ப்ரீபெய்டு திட்டங்கள் நீக்கப்பட்ட பிறகு பல பயனர்கள் X தளத்தில் அவர்களுடைய புகார்களை பகிர்ந்து வந்தனர். இந்த சிக்கல்களை நிவர்த்தி செய்ய புதிய மூன்று திட்டங்கள் ஜியோவால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு நாளைக்கு 2GB அல்லது அதற்கு மேற்பட்ட டேட்டா வழங்கும் திட்டங்களை முன்னரே ரீசார்ஜ் செய்தவர்கள் மட்டுமே வரம்பற்ற 5G டேட்டாவை பெற முடியும். ஒரு நாளைக்கு 1.5GB டேட்டாவைக் கொண்டுள்ள பயனர்கள் 5G டேட்டாவை பயன்படுத்த வரம்புகள் உள்ளன.
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் அனைத்து ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் மற்றும் டேட்டா திட்டங்களுக்கான கட்டணங்களை சமீபத்தில் அதிகரித்துள்ளன. அந்த திட்டங்களின் விலை சுமார் 25% வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரூ.2,999 மதிப்புள்ள டேட்டா பேக் இப்போது ரூ.3,599-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு பல தொலைத்தொடர்பு பயனர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் பல பயனர்களும் BSNL-க்கு மாறுவது குறித்து யோசித்து வருவதாக சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications