ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் திவாலான நிலையில் இந்த நிறுவனத்திற்கான தீர்வு இறுதியாக 2 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வர உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம், மும்பை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் புதிய விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளது. இந்த விண்ணப்பத்தில் ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் நிறுவனத்தையும் அதன் சொத்துக்களையும் கைப்பற்றுவதற்காக, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா-வின் எஸ்க்ரோ கணக்கில் மொத்தம் 3,720 கோடி டெபாசிட் செய்யத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
திவாலான தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்-க்கு (ஆர்காம்) சொந்தமான டெலிகாம் டவர் மற்றும் ஃபைபர் சொத்துக்கள் அனைத்தும் ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் நிறுவனத்தில் தான் உள்ளது.
அனில் அம்பானி
அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் வர்த்தகம், வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து இழந்த காரணத்தால் வங்கிகளில் வாங்கிய கடனை திரும்பி செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது மட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தைத் திவாலாக அறிவித்து, விற்பனை செய்து தீர்வு கான முடிவு செய்யப்பட்டது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்
இந்த நிலையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் டெலிகாம் டவர் மற்றும் ஃபைபர் சொத்துக்கள் இருக்கும் ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் நிறுவனத்தைக் கைப்பற்றுவதில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ தேர்வு செய்யப்பட்டது, ஆனாலும் பல வருடங்களாகச் சொத்துகளைக் கைப்பற்ற முடியாத நிலை உருவாகியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ
இதற்கிடையில் ரிலையன்ஸ் ஜியோ-வின் கிளை நிறுவனமான ரிலையன்ஸ் ப்ராஜெக்ட்ஸ் மற்றும் ப்ராபெர்டி மேனேஜ்மென்ட் சர்வீசஸ் அக்டோபர் 20 ஆம் தேதி NCLT அமைப்பிக்கு சமர்ப்பித்த அறிக்கையில் தீர்வு நிதியை விநியோகிப்பதில் கடன் வழங்குபவர்களுக்கு இடையேயான தகராறுகள் தொடரும் வேளையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் -இன் டவர் மற்றும் ஃபைபர் சொத்துக்களைக் கையகப்படுத்துவதைத் தாமதப்படுத்துகிறது, இதோடு அவற்றின் மதிப்பை குறைந்து வருகிறது எனத் தெரிவித்துள்ளது.
வங்கிகள்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, தோஹா வங்கி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் மற்றும் எமிரேட்ஸ் வங்கி உள்ளிட்ட பிற கடன் வழங்கியவர்கள் மத்தியிலான நிதி விநியோகம் தொடர்பாக வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கு முடிவுக்கு வந்தால் மட்டுமே ஜியோவின் கிளை நிறுவனமான ரிலையன்ஸ் ப்ராஜெக்ட்ஸ் மற்றும் ப்ராபெர்டி மேனேஜ்மென்ட் சர்வீசஸ் அளிக்கும் பணத்தை ஏற்றுக் கடன் வழங்கியவர்களுக்குப் பகிர முடியும்.
ரூ.3,500 கோடி டெபாசிட்
இந்த நிலையில் தான் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் விண்ணப்பத்தில் ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் நிறுவனத்தையும் அதன் சொத்துக்களையும் கைப்பற்றுவதற்காக, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா-வின் எஸ்க்ரோ கணக்கில் மொத்தம் 3,720 கோடி டெபாசிட் செய்யத் தயாராக உள்ளதாகத் தெரிவித்தும், ஆர்காம் சொத்துக்களின் மதிப்பு குறைந்து வருவதாக விளக்கம் கொடுத்து விரைவில் தீர்வு காண நிர்பந்தம் செய்துள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் திவால்
முகேஷ் அம்பானி, அனில் அம்பானிக்கு மத்தியில் பல வருடங்களாகப் பல பிரச்சனைகள் இருந்து வந்தாலும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் திவால் மூலம் அனில் அம்பானியின் சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சி அடைந்தது. இதன் மூலம் ஆர்காம் சொத்துக்களை யாரும் வாங்க முன்வராத நிலையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ முன் வந்தது.
முகேஷ் அம்பானி, அனில் அம்பானி
இந்த அறிவிப்பு மூலம் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி மத்தியில் நெருக்கம் அதிகமானது மட்டும் அல்லாமல் அண்ணனின் உதவிக்கு அனில் அம்பானி நெகிழ்ந்து நன்றி கூறினார். இதன் பின்பு அனில் அம்பானி எதிராக லண்டன் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் தன்னிடம் எந்தச் சொத்துக்களும் இல்லை என்றும், தனது சொத்து மதிப்பு ஜீரோ எனவும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications