இந்நியாவில் இண்டர்நெட் நுகர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், இந்த வளர்ச்சியில் டெலிகாம் நிறுவனங்கள் இதில் முக்கியமான பங்கு வகித்து வருகிறது.
இதேவேளையில் நாளுக்கு போட்டியும், டெலிகாம் கட்டணமும் அதிகரித்து வரும் வேளையில் வாடிக்கையாளர்கள் வெளியேற்றும் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இதை கட்டுப்படுத்த இந்தியாவில் முதல் முறையாக நீண்ட கால திட்டத்தை முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்துள்ளது.

பொதுவாக டெலிகாம் நிறுவனங்கள் ஒரு வருடத்திற்கான திட்டத்தை வெளியிடுவது இயல்பு, ஆனால் ரிலையன்ஸ் ஜியோ முதல் முறையாக 3 ஆண்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
ஆம், சுமார் 36 மாதங்களுக்கான திட்டத்தை 10000 ரூபாய் விலையில் அறிமுகம் செய்துள்ளது ஜியோ, இந்த திட்டத்தில் டேட்டா, என்டர்டெயின்மென்ட், இதர பல முக்கியமான சேவைகளும் இதில் அடங்கியுள்ளது. 10000 ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்தில் தினமும் 2.5 ஜிபி அதிவேக இண்டர்நெட், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன், கேன்வா ப்ரோ லைட், ஜியோ ஏஐ கிளவுட் சேவைகளையும் இணைந்த வழங்குகிறது ஜியோ.
ஓவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்யும் மக்களுக்கு இந்த நீண்ட திட்டம் மூலம் நிலையான சேவையை, நிலையான கட்டணத்தில் பெறலாம். டெலிகாம் நிறுவனங்கள் செலவுகள் உயர்வின் காரணமாக விரைவில் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தில் இருக்கும் வேளையில், 10000 ரூபாய் விலையில் 3 வருடத்திற்கான நிலையான திட்டத்தை பெறுவது என்பது லாபகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் ஆரம்பக்கட்ட முதலீடு என்பது அதிகமாக இருக்கும் காரணத்தால் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் இத்திட்டத்தை தேர்வு செய்வார்களா என்பது பெரிய கேள்வியாக உள்ளது.
10000 ரூபாய் திட்டம் என்றால் மாதம் 278 ரூபாய் விலையில் தினமும் 2.5 ஜிபி இண்டர்நெட், ஹாட்ஸ்டார், கேன்வா சேவைகளை பெறலாம். இது சந்தையில் தற்போது நடைமுறையில் இருக்கும் பல திட்டங்களை காட்டிலும் விலை குறைவானது. இதேபோல்
சமீபத்தில் மோதிலால் ஆஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி மார்ச் 2027ல் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் தனது மொபைல் சேவை கட்டணங்களை 15 சதவீதம் வரையில் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிவித்துள்ளது.
ஜியோ தனது ஐபிஓ வெளியிடே்ட பின்பு பெரிய அளவிலான கட்டண உயர்வுக்கு தயாராகி வருகிறது, இந்த கட்டண உயர்வுக்கு முன்பு நீண்ட கால திட்டத்தை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் பேசிக் திட்டத்தை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications