இன்றெல்லாம் டெலிகாம் நிறுவனங்களில் போட்டி அதிகரித்துவிட்டன. இதனால் பல முன்னணி டெலிகாம் நிறுவனங்களும் புதுப்புது பிளான்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் ஜியோ நிறுவனம் 601 ரூபாய்க்கு ஒரு புதிய பிளானை அறிமுகம் செய்துள்ளது. அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை மலிவு விலையில் பெற நினைப்பவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பலன் பெறலாம்.
அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெற நீங்கள் ஏற்கனவே ஒரு நாளைக்கு 1.5 ஜிபி 4ஜி டேட்டாவை வழங்கும் திட்டத்தில் ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும். ரூ.199, ரூ.239, ரூ.299 போன்ற திட்டங்கள் மற்றும் இந்த வரம்பில் உள்ள பிற திட்டங்களையும் ரீசார்ஜ் செய்திருந்தால் 601 ரூபாய் செலுத்தி அன்லிமிடெட் 5ஜி சேவையை பெறலாம்.

அதுவே நீங்கள் ஜியோவின் தினசரி 1 ஜிபி டேட்டா திட்டம் அல்லது ரூ. 1899 என்ற வருடாந்திர ரீசார்ஜ் திட்டத்தை பயன்படுத்தி ரீசார்ஜ் செய்திருந்தால் ரூ. 601 மதிப்பிலான இந்த புதிய திட்டத்தை உங்களால் பயன்படுத்த முடியாது.
ரூ. 601 பிளானுக்கு என்னென்ன கிடைக்கும்?: ரூ.601 ஜியோ ட்ரூ 5ஜி பிளானை வாங்கினால் 12 கிஃப்ட் வவுச்சர்கள் கிடைக்கும். மை ஜியோ ஆப் மூலம் இவற்றை ஒவ்வொன்றாக ரிடீம் செய்து கொள்ளலாம்.
இந்த பிளானுக்கு பயனர்கள் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெற முடியும் மற்றும் ஒரு நாளைக்கு 3ஜிபி அதிகரித்த 4ஜி டேட்டாவையும் பெற முடியும். அதோடு நீங்கள் ஏற்கனவே ரீசார்ஜ் செய்திருக்கும் திட்டத்தின் அடிப்படையில் தற்போதைய இந்த திட்டம் செல்லுபடியாகும் என்பதை கவனத்தில் கொள்ளவும். ஏற்கனவே 1.5 ஜிபி டேட்டாவை வழங்கும் திட்டத்தின் மூலம் ரீசார்ஜ் செய்திருந்தால் மட்டுமே ரூ.601 திட்டத்திற்கு ரீசார்ஜ் செய்ய முடியும். எனவே அதை பொருத்து இந்த 3ஜிபி டேட்டாவும் மாறுபடும். உதாரணமாக சொல்ல வேண்டுமானால் உங்களுடைய திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் என்றால் வரம்பற்ற 5ஜி திட்டத்தை அந்த காலகட்டத்திற்குள் பெற முடியும்.
யார் இந்த திட்டத்தைப் பயன்படுத்தலாம்?: ஜியோவின் வரம்பற்ற 5G திட்டத்தை ரூ.199, ரூ.239, ரூ.299, ரூ.319, ரூ.329, ரூ.579, ரூ.666, ரூ.769 மற்றும் ரூ.899 போன்ற பல பிரபலமான ரீசார்ஜ் திட்டங்களை பயன்படுத்தி ரீசார்ஜ் செய்திருப்பவர்கள் கூடுதல் டேட்டாவை பெற பயன்படுத்தலாம்.
ரூ.601 திட்டம் மட்டுமல்லாமல் மேம்படுத்தப்பட்ட 5ஜி டேட்டாவை பெறுவதற்கு ஒருவர் ரூ.51, ரூ.101, ரூ.151 போன்ற திட்டங்களையும் பயன்படுத்தலாம். இதற்கு ஒரு நாள், இரண்டு நாட்கள் மற்றும் மூன்று மாதங்கள் வரையிலான டேட்டா கிடைக்கும். குறுகிய கால தேவைகளுக்கு 5ஜி டேட்டாவை பயன்படுத்த விரும்புவோர் இந்த திட்டங்களை பயன்படுத்தி பலனடையலம்.


Click it and Unblock the Notifications