இந்தியாவில் டெலிகாம் சேவையில் தனியார் நிறுவனங்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதில் முதன்மை நிறுவனமாக இருக்கிறது முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஜியோ நிறுவனம்.
ஜியோ: கடந்த 2016 ஆம் ஆண்டில் தான் ஜியோ நிறுவனம் தன்னுடைய தொலைதொடர்பு சேவையை கொண்டு வந்தது. படிப்படியாக வளர்ச்சி அடைந்து இந்தியாவில் தொலைதொடர்பு பிரிவில் நம்பர் ஒன் நிறுவனமாக மாறிவிட்டது ஜியோ. தொடக்கத்தில் பல்வேறு சலுகையுடன் கூடிய அதிரடியான ரீசார்ஜ் திட்டங்களை ஜியோ கொண்டு வந்ததே அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை அந்த நிறுவனம் பெறுவதற்கு காரணமாக இருந்தது.

பேஸிக் பேக் நீக்கம்: இந்த சூழலில் ஜியோ நிறுவனம் திடீரென தங்களுடைய பேஸிக் ரீசார்ஜ் திட்டம் ஒன்றை நிறுத்தி இருப்பது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஜியோ நிறுவனம் தன்னுடைய தினசரி 1 ஜிபி மொபைல் டேட்டா ரீசார்ஜ் திட்டத்தை திடீரென நிறுத்தி இருக்கிறது. ஜியோ நிறுவனம் 22 நாட்கள் வேலிடிட்டி கொண்ட 209 ரூபாய் மதிப்பிலான ரீசார்ஜ் திட்டத்தை வழங்கி வந்தது இதில் வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 1 ஜிபி மொபைல் டேட்டாவை பெறுவார்கள்.
தினசரி 1ஜிபி டேட்டா திட்டம்: அதே போல 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட 249 ரூபாய் மதிப்பிலான ரீசார்ஜ் திட்டத்தை செயல்படுத்தி வந்தது. இந்த திட்டத்திலும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 1 ஜிபி மொபைல் டேட்டா கிடைக்கும். ஜியோ நிறுவனம் வழங்கிய டேட்டா உடன் கூடிய பேஸிக் ரீசார்ஜ் திட்டமாக இது பார்க்கப்பட்டது. பெரும்பாலான பயனாளர்கள் இந்த திட்டத்தில் தான் தங்களுடைய எண்களை ரீசார்ஜ் செய்து வந்தனர்.
கூடுதல் செலவு: மாதத்திற்கு 249 ரூபாய் இருந்தால் போதும் என்பதால் பல ஜியோ வாடிக்கையாளர்களின் விருப்பமான திட்டமாக இது இருந்தது. இந்நிலையில் திடீரென ஜியோ இந்த ரீசார்ஜ் திட்டத்தை நிறுத்தி இருக்கிறது. இனி ஜியோ வாடிக்கையாளர்கள் இந்த பேஸிக் பேக்கில் ரீசார்ஜ் செய்ய முடியாது.
இனி 1.5 ஜிபி டேட்டா பேக்: ஜியோவில் இனி ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா வழங்கும் திட்டங்களில் மட்டுமே அவர்கள் ரீசார்ஜ் செய்ய முடியும். எனவே இதனால் வரை 249 ரூபாய்க்கு 28 நாட்கள் வேலிடிட்டி பேக்கில் ரீசார்ஜ் செய்து வந்த வாடிக்கையாளர்கள் இனி 299 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கும். இதன் மூலம் அவர்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும். ஆனால் இதற்காக கூடுதலாக 50 ரூபாய் செலவிட வேண்டும் அல்லது 14 நாட்கள் வேலிடிட்டி கொண்ட 198 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டி இருக்கும்.
வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி: ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இனி ஒரு நாளைக்கு ஒரு ஜிபி என்ற டேட் பேக் கொண்ட ரீசார்ஜ் திட்டங்கள் கிடைக்காது. பெரிய அளவில் இணையதளங்களை பயன்படுத்தாதவர்கள் பெரியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு ஏற்ற திட்டமாக பேஸிக் ரீசார்ஜ் திட்டம் இருந்தது. ஜியோ இதனை நீக்கி இருப்பதால் ஏர்டெல் போன்ற மற்ற நிறுவனங்களும் இதனை பின்பற்றுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications