நாடு முழுவதும் பல இடங்களில் ஜியோ சேவைகள் இரண்டாவது நாளாக முடங்கியுள்ளது.
கிராமம் முதல் மெட்ரோ நகரம் வரையில் பல தரப்பினரும் பயன்படுத்தும் தொலைத் தொடர்பு சேவையில் முக்கிய பங்கு வகிக்கும் ஜியோ, இரண்டாவது நாளாக முடங்கியுள்ள நிலையில், அதன் வாடிக்கையாளர்கள் மோசமான பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர்.
குறிப்பாக ஜியோவின் இந்த சேவை பாதிப்பானது மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் முடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இணைய சேவை பெறுவதில் சிக்கல்
மேற்கண்ட பகுதிகளை சார்ந்த சுமார் 63% பயனர்கள் தங்கள் தொலைபேசிகளில், இணைய சேவையினை பெறுவதில் பெரும் சிக்கல் இருந்து வருகிறது. இது குறித்து பல்வேறு தரப்பினரும் புகார் அளித்தும் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த புதன் கிழமையன்றும் ஜியோ சேவைகள் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஜியோ பைபர் சேவை
குறிப்பாக ஜியோவின் பைபர் சேவை இந்தியாவின் பல பகுதிகளிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஜியோ சேவை பாதிக்கப்பட்ட 5 நிமிடங்களுக்குள் சுமார் 300 பேர் புகார் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
2வது நாளாக பாதிப்பு
தொடர்ந்து இரண்டாவது நாளாக ஜியோ சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் #jiodown என்ற ஹேஸ்டேக்கும் ட்ரெண்டாகி வருகின்றது. ட்விட்டரில் பல்வேறு வாடிக்கையாளர்களும் ஜியோவின் கவனத்திற்கு எடுத்து செல்ல முயன்று வருகின்றனர். பலரும் தங்களது பிரச்சனையை ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.
ஜியோ முடக்கமா?
எனினும் ஜியோ நிறுவனம் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. சமீபத்திய மாதத்தில் ஏற்கனவே ஒன்றிரண்டு முறை இதேபோல பிரச்சனை வந்துள்ளது. தொடர்ந்து இதுபோன்று வரும் பிரச்சனைகள் ஜியோ வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது.
பெரும் குழப்பம்
ஜியோ நிறுவனம் 5ஜி சேவையினை வெற்றிகரமாக பல நகரங்களில் அறிமுகம் செய்துள்ளது. தொடர்ந்து பல நகரங்களில் விரிவாக்கம் செய்து வரும் ஜியோ நிறுவனத்தின் சேவையானது வேகமாக விரிவடைந்து வரும் நிலையில், மறுபுறம் கடந்த 2 நாட்களாக முடங்கியுள்ளது பெரும் குழப்பத்தினை வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications