யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜியோ தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து வருடாந்திர ஜியோ சினிமா பிரீமியம் பிளானை நீக்கியுள்ளது. கட்டணங்களை குறைந்த சில நாட்களுக்குள் இந்த நடவடிக்கையை ஜியோ எடுத்துள்ளது. ஜியோ சினிமா பிரீமியம் வருடாந்திர பிளான் இந்தியாவில் அண்மையில்தான் ரூ.299 கட்டணத்தில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தப் பிளான் முன்பு ரூ.999க்கு வழங்கப்பட்டது. ஆனால் இப்போது இந்த பிளானை நீங்கள் வாங்க முடியாது. அந்த பிளான் ஜியோவின் வெப்சைட்டில் இருந்து நீக்கப்பட்டு விட்டது.
ஜியோ சினிமா வெப்சைட் இப்போது இரண்டு பிளான்களை மட்டும் வைத்துள்ளது. அது ரூ.299 பிரீமியம் மாதம் மற்றும் ரூ.89 ஃபேமிலி. வருடாந்திர ஜியோ சினிமா பிரீமியம் பிளான் இனி கிடைக்காது.

ஜியோ சினிமா பிரீமியம் பிளான்கள் விளம்பரம் இல்லாத ஹாலிவுட் திரைப்படங்கள், டிவி சீரிஸ்கள், குழந்தைகள் நிகழ்ச்சிகளை பார்க்க அனுமதிக்கிறது. நிகழ்ச்சிகளை ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் எந்த சாதனத்திலும் ஸ்டீரம் செய்யலாம். குடும்ப பிளானில் ஒரே சமயத்தில் நான்கு சாதனங்களில் நிகழ்ச்சிகளை பார்க்கலாம்.
2024 ஐபிஎல்லின் போது 53 சதவீத பார்வையாளர்களை பெற்றதாக ஜியோ சினிமா தெரிவித்துள்ளது. விரைவில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளை பிரீமியம் வாடிக்கையாளர்களுக்கென தர உள்ளது. அத்துடன் குளோபல் சீரிஸ்கள், மூவி பிரிமீயர்களையும் பார்க்கலாம்.
ஜியோ சினிமாவின் முக்கிய பார்ட்னர்களான பீகாக், ஹெச்பிஓ, பாரமவுன்ட், வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி மூலம் கேம் ஆப் திரோன்ஸ், ஹவுஸ் ஆப் தி டிராகன், ஓபன்ஹெய்மர், பார்பி, சக்சஷன், தி லாஸ்ட் ஆப் அஸ் ஆகியவற்றையும் பார்க்கலாம்.
பிரீமியம் கன்டன்ட்களை ஹிந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மராத்தி போன்ற மல்டிபிள் லாங்குவேஜ்களில் பார்க்கலாம். கட்டணக் குறைப்புக்குப் பிறகு ஜியோ சினிமா பிரீமியம் பிளான் கட்டணம் நாளொன்றுக்கு ரூ.1 ஆகும். மாதாந்திர கட்டண்ம் ரூ.29. முன்பு இந்தக் கட்டணம் ரூ.99.
சீரமைக்கப்பட்ட ஜியோ சினிமா பிரீமியம் மாதந்திர பிளான் 51 சதவீத தள்ளுபடியை அறிவித்தது. முன்னர் ரூ.59 ஆக இருந்தது. முரண்பாடுகள் இருந்தபோதிலும், புதிய கட்டணமானது நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ போன்ற போட்டியாளர்களை விட கணிசமான சேமிப்பு மற்றும் கூடுதல் நன்மைகளை வழங்குகிறது.
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications