தற்போது அனைவரிடத்திலும் ஸ்மார்ட்போன் உள்ளது. ஸ்மார்ட்போன் உள்ள அனைவருக்கும் ஒரு அதிர்ச்சி அளிக்கும் தகவல் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியானது. அதன்படி ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய 3 முன்னணி டெலிகாம் நிறுவனங்களும் தங்கள் மொபைல் ரீசார்ஜ் திட்டங்களில் கட்டண உயர்வை அறிவித்தன. இதனால் அதன் பயனர்கள் அதிக விலை கொடுத்து ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பதிவில் எந்த டெலிகாம் நிறுவனம் மிகச் சலுகையான திட்டத்தை வழங்குகிறது என்பதைப் பார்ப்போம்.
முகேஷ் அம்பானி தலைமையிலான டெலிகாம் நிறுவனமான ஜியோ, முதன் முதலில் தனது ரீசார்ஜ் கட்டண உயர்வை அறிவித்தது. அதன் பின் வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டும் ஜியோவைப் பின்தொடர்ந்தன. ஜியோ மற்றும் ஏர்டெல் கட்டணங்களின் அதிகரிப்பு ஜூலை 3 முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில், வோடபோன் ஐடியா, ஒரு நாள் கழித்து ஜூலை 4 முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

இந்த கட்டண உயர்வு குறித்து கூறிய வோடபோன் ஐடியா நிறுவனம் அடுத்த சில மாதங்களில் 4G சேவையை மேம்படுத்துவதற்கும், 5G சேவையை அறிமுகப்படுத்துவதற்கும் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் ஏர்டெல் நிறுவனம், அடிப்படை திட்டங்களுக்கான கட்டண உயர்வு மிகக் குறைவாகவே இருக்கும் என உறுதி அளித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவது, 5G மற்றும் AI தொழில்நுட்பத்தில் முதலீடுகள் செய்வதற்கும் மற்றும் நிலையான வளர்ச்சி பாதையை நோக்கி செல்வதற்கான படி எனத் தெரிவித்துள்ளது. மேலும், "ஜியோ எப்போதும் நம் நாட்டையும் வாடிக்கையாளர்களையும் முதன்மையாகக் கருதி, இந்தியாவுக்காக தொடர்ந்து முதலீடு செய்யும்" என்றும் கூறியுள்ளது.
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய 3 டெலிகாம் நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்டங்களையும் ஒப்பிட்டு பார்த்து, 28 நாட்கள் செல்லுபடி ஆகும் திட்டத்திற்கு எவ்வளவு விலை? நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதைப் பார்ப்போம்.
வோடபோன் ஐடியா (28 நாட்கள் வேலிடிட்டி): இந்த பிளான் ரூ. 299 ரூபாய்க்கு பயனர்களுக்கு கிடைக்கிறது. இந்த பிளானில் ஒரு நாளைக்கு 1GB டேட்டா வழங்கப்படுகிறது. அதோடு ஒரு நாளைக்கு 100 SMS அனுப்ப முடியும். 28 நாட்களுக்கும் அன்லிமிடெட் காலிங் வசதி கிடைக்கிறது.
ஏர்டெல் (28 நாட்கள் வேலிடிட்டி): இந்த பிளானும் ரூ. 299 ரூபாய்க்கு பயனர்களுக்கு கிடைக்கிறது. இந்த பிளானில் ஒரு நாளைக்கு 1GB டேட்டா வழங்கப்படுகிறது. அதோடு ஒரு நாளைக்கு 100 SMS அனுப்ப முடியும். 28 நாட்களுக்கும் அன்லிமிடெட் காலிங் வசதி கிடைக்கிறது.
ஜியோ (28 நாட்கள் வேலிடிட்டி): இந்த பிளான் ரூ. 249 ரூபாய்க்கு பயனர்களுக்கு கிடைக்கிறது. இந்த பிளானில் ஒரு நாளைக்கு 1GB டேட்டா வழங்கப்படுகிறது. அதோடு ஒரு நாளைக்கு 100 SMS அனுப்ப முடியும். 28 நாட்களுக்கும் அன்லிமிடெட் காலிங் வசதி கிடைக்கிறது.
1 ஜிபி தினசரி டேட்டா வழங்கும் திட்டத்தில் ஜியோ நிறுவனம் மிகவும் மலிவான விலையை வழங்குகிறது என்பது தெளிவாகிறது. வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இரண்டுமே ரூ.299-க்கு இந்த திட்டத்தை வழங்கும் நிலையில், ஜியோ ரூ.249-க்கே வழங்குகிறது.
56 நாட்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை 3 நிறுவனங்களும் ரூ.579 என்ற விலையில் வழங்குகிறது. 1 ஆண்டு ப்ரீபெய்டு திட்டத்தை பொறுத்தவரை, வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.3499க்கும், ஏர்டெல் ரூ.3599க்கும் வழங்கினாலும், வோடபோன் ஐடியா 1.5 ஜிபி டேட்டாவையும், ஏர்டெல் 2 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது. ஜியோ 2.5 ஜிபி டேட்டா வழங்கி அதிக டேட்டா தரும் திட்டத்தைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications