இந்திய டெலிகாம் சந்தையில் பெரும் புரட்சியை செய்த ரிலையன்ஸ் ஜியோ வெறும் 999 ரூபாய்க்கு ஜியோ பாரத் என்ற புதிய இண்டர்நெட் வசதி கொண்ட பியூச்சர் போனை அறிமுகம் செய்துள்ளது. முகேஷ் அம்பானி மற்றும் ஆகாஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே பல ஜியோ போன்களை அறிமுகம் செய்துள்ள நிலையில் எதற்காக இந்த புதிய ஜியோ போன்.
இந்திய மக்கள் மொத்தமும் 5ஜி சேவை நோக்கி பயணித்துக் கொண்டு இருக்கும் வேளையில், நாட்டில் இன்னும் 250 மில்லியன் மக்கள் 2ஜி சேவையில் பியூச்சர் போன் உடன் முடங்கி கொண்டு இருக்கிறார்கள். இது வேகமாக செல்லும் கப்பல் நங்கூரம் போட்டது போல் இருக்கும் என்பதை உணர்ந்த ஆகாஷ் அம்பானி வெறும் 999 ரூபாய்க்கு JioBharat போனை அறிமுகம் செய்துள்ளார்.

இதுகுறித்து ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்ட அறிக்கையில் ஆகாஷ் அம்பானி 6 வருடத்திற்கு முன்பே ஜியோ டெலிகாம் நிறுவனம் அறிமுகம் செய்யும் போதே, இண்டர்நெட் சேவையை நாட்டு மக்கள் அனைவருக்கும் கொடுப்பதில் அனைத்து விதமான முயற்சிகளையும் எடுப்போம், தொழில்நுட்பத்தின் பலனை அனைவருக்கும் அளிக்க வேண்டும் என்ற ஜனநாயக முறையை கொண்டு வருவோம் என இலக்கை நிர்ணயம் செய்தோம் என ஆகாஷ் அம்பானி தெரிவித்தார்.
வர்த்தக அடிப்படையில் பார்த்தால் ரிலையன்ஸ் ஜியோவிடம் தற்போது 2ஜி சேவை அளிப்பதற்கான அலைக்கற்றை இல்லை, ஜியோ அறிமுகம் செய்யும் போதே 4ஜி சேவையுடன் அறிமுகமாகி, 5ஜி சேவையை நோக்கிய பயணித்துக்கொண்டு இருக்கிறது. இந்தியாவில் தற்போது 2ஜி சேவையில் சுமார் 250 மில்லியன் மக்கள் உள்ளனர், இவர்களை அடைய ஒரே வழி மலிவான விலையில் போன் மற்றும் டெலிகாம் சேவை திட்டங்களை கொடுப்பது தான்.

இதை ரிலையன்ஸ் ஜியோ கடந்த சில வருடத்தில் பல்வேரு மாடல்களில் மலிவு விலையில் பல போன்களை அறிமுகம் செய்து முயற்சி செய்த நிலையில் பெரிய வெற்றியை அடைய முடியவில்லை. இந்த சூழ்நிலையில் இந்த முறை JioBharat போன் மூலம் பல்வேறு கூடுதல் சேவைகளை வழங்கி, மலிவான விலையில் டெலிகாம் சேவையும் அளிக்க உள்ளது.
JioBharat போன் மூலம் 2ஜி சேவை வாடிக்கையாளர்களை ஈர்ப்பது மட்டும் அல்லாமல் சக போட்டி நிறுவனங்களுக்கும் வர்த்தகம், வருமான பாதிப்பை உருவாக்க முடியும். இது கட்டாயம் பெரிய அளவில் பலன் அளிக்கும் என நம்பப்படும் வேளையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இன்று காலை வர்த்தகத்தில் 1.41 சதவீதம் சரிந்து 2,578.70 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.


Click it and Unblock the Notifications