இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் சேவை நிறுவனமாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர் மற்றும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய பல முயற்சிகளை செய்து வருகிறது. இந்திய டெலிகாம் சந்தையில் ஒரு காலத்தில் ஒரு நிமிட போன் பேச 2 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில், இன்று முற்றிலும் இலவசமாக மாறியது. இப்போது டேட்டாவுக்கு மட்டும் தான் காசு.
இது மட்டுமா 4ஜி சேவையை மக்கள் 360 கோணத்திலும் அனைத்து சேவைகளிலும் பயன்படுத்தி வரும் வேளையில், அதிவேக இண்டர்நெட்-க்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காரணத்தால் 5ஜி சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. 5ஜி சேவையில் ஏர்டெல்-ஐ பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ள ரிலையன்ஸ் ஜியோ-வுக்கு 2ஜி சேவை பிரிவில் இருக்கும் 200 முதல் 250 மில்லியன் வாடிக்கையாளர்கள் மீது பலவருடமாக கண் இருந்து வந்தது.

இந்த நிலையில் இப்பிரிவு வாடிக்கையாளர்களை பெறும் முயற்சியாக ஜியோ தனது சொந்த பிளாட்பார்ம் ஆன ஜியோ பார்த் பிளாட்பார்ம்-ல் புதிய ஜியோ பாரத் போன்களை தயாரித்து ஜூலை 7 ஆம் தேதி 10 லட்சம் போன்களை சோதனை செய்ய உள்ளது. இப்படி 999 ரூபாய்க்கு இந்த போனில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு..?
JioBharat phone-ம் இதற்கு முன்பு ரிலையன்ஸ் அறிமுகம் செய்த ஜியோ போனும் கிட்டத்தட்ட ஒன்று தான் என்றாலும், இப்புதிய போனில் ரிலையன்ஸ் குழுமத்தின் OTT தளமான Jio Cinema, மியூசிக் தளமான Jio saavan, ஸ்கேன் செய்து பே செய்யப்படும் UPI சேவையான Jio Pay ஆகியவை உள்ளது. இதனுடன் பிரென்ட் - பேக் கேமரா இருப்பதால் வீடியோ கால், போட்டோக்களையும் எடுக்க முடியும்.
கிட்டத்தட்ட ஒரு பேசிக் ஸ்மார்ட்போனில் இருக்கும் அனைத்து சேவைகளும் இந்த ஜியோ பார்த் போனில் இருக்கிறது. இதோடு வெறும் 123 ரூபாய்க்கு அன்லிமிடெட் கால் வசதியும் 14 ஜிபி இண்டர்நெட் டேட்டாவும் கொடுக்கப்படுகிறது. இதுவே மற்ற போட்டி நிறுவனங்கள் 179 ரூபாய் மாதாந்திர கட்டணத்தில் வெறும் 2 ஜபி டேட்டா மட்டுமே அளிக்கிறது.


Click it and Unblock the Notifications