இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடும் இந்தியன் பிரீமியர் லீக்-ன் 16வது சீசன் ஐபிஎல் 2023 இரண்டு மாதங்களுக்குப் பிறகு மே 28 அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மத்தியிலான போட்டி உடன் முடிவடைகிறது. இந்த போட்டி தோனியா பாண்ட்யா-வா? தமிழ்நாடா குஜராத்-ஆ? என்ற நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
TATA IPL 2023 இன் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் பார்ட்னரான JioCinema இலவச திட்டங்கள் வாயிலாகவும், அதன் IPL பார்வையாளர்களின் எண்ணிக்கையில் புதிய சாதனைகளை படைத்து வருகிறது. ஐபிஎல் 2023 போட்டியின் முதல் ஐந்து வாரங்களில் ஜியோ சினிமா தளம் சுமார் 1300 கோடி வீடியோ பார்வைகளைப் பெற்று புதிய பென்ச்மார்க் அளவீட்டை செட் செய்தது.

ஜியோ சினிமா FIFA உலக கோப்பையில் இருந்து தொடர்ந்து இலவசமாக ஒளிப்பரப்பி வருவதன் மூலம் பல கோளாறுகள் இத்தளத்தில் இருந்தாலும் அதிகப்படியான வாடிக்கையாளர்களை பெற்று வருகிறது. இந்த இலவசம் மூலம் ஒரு போட்டிக்கு சராசரியாக 60 நிமிடங்களுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இத்தளத்தில் நேரத்தை செலவிடுகின்றனர்.
இந்த சீசனில், ஐபிஎல்லின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங்கின் போது ஸ்பான்சர்களின் எண்ணிக்கை எந்த ஒரு விளையாட்டுப் போட்டியிலும் இல்லாத அளவுக்கு 26 ஆக உயர்ந்தது. ஆனால் இனி மேல் தான் பிரச்சனை, ஐபிஎல் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை முடிய உள்ளது, இந்த நிலையில் ஜியோ சினிமா தனது வாடிக்கையாளர்களை எப்படி தக்க வைக்கப்போகிறது என்பது முக்கிய கேள்வியாக உள்ளது.
ஏற்கனவே ஹாட்ஸ்டார், அமேசான் ப்ரைம், நெட்பிளிக்ஸ் வாடிக்கையாளர்களை தக்க வைப்பதில் பல பிரச்சனைகளையும், நெருக்கடிகளையும் எதிர்கொண்டு வரும் வேளையில், ஜியோ சினிமா இந்த மாபெரும் வாடிக்கையாளர் கூட்டத்தை இழக்க தயாராக இல்லை. இந்த நிலையில் ஜியோ சினிமா தளம் ஸ்போர்ட்ஸ் எண்டர்டெயின்மென்ட் பிரிவை தாண்டி வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய உள்ளது.
இதில் முதல் கட்டமாக ஜியோ சினிமா தளத்துடன் Viacom18 Media நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்ட்ரீமிங் தளமான Voot-ஐ இணைக்க உள்ளது. இதை தொடர்ந்து 100 திரைப்படம், டிவி சீரியஸ்-களை வாங்கவும் அதை ஜியோ சினிமா தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யவும் திட்டமிட்டு உள்ளது.

ஜியோ சினிமா தளத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற திட்டத்துடன், இதன் மூலம் வருவாய் பெற வேண்டும் என்ற திட்டத்துடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜியோ சினிமா தளத்திற்கு ஒரு பிரீமியம் சந்தா கட்டணத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் முகேஷ் அம்பானி ஜியோ சினிமா-வின் இலவச சேவை பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
HBO மற்றும் Warner Bros போன்ற ஸ்டுடியோக்களில் இருந்து கன்டென்ட்-ஐ சமீபத்தில் ஜியோ சினிமா வாங்கிய நிலையில், இதை ஸ்ட்ரீம் செய்து பார்க்க வேண்டுமாயின் JioCinema தளம் ஒரு வருடத்திற்கு ரூ 999 வசூலிக்கிறது. சந்தையில் இருக்கும் பிற சேவைகளை காட்டிலும் குறைவான கட்டணம் தான். ஜியோ சினிமா தளத்தில் HBO மற்றும் Warner Bros போன்ற பிராண்ட் கன்டென்ட்டை பார்க்க வேண்டும் என்றால் மட்டுமே பணம் செலுத்த வேண்டும், மற்றவை தொடர்ந்து இலவசமாகவே வழங்கப்படுகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications