இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி இலவசங்கள் மூலம் அதிகப்படியான வாடிக்கையாளர்களையும் வர்த்தகத்தையும் பெற்று வேகமாக வளர்ச்சி அடையும் பார்மூலா-வை அனைத்து துறையிலும் பயன்படுத்தி வருகிறார்.
ஐபிஎல் ஒளிபரப்பு ஒப்பந்தத்தை கைப்பற்ற திட்டமிட்ட நாளில் இருந்து தனது ஜியோ சினிமா தளத்தை நாட்டின் முன்னணி OTT இயங்குதளமாக மாற்ற வேண்டும் என இலக்கை நிர்ணயம் செய்தது. FIFA உலக கோப்பை மூலம் JioCinema தளத்தை பல வகையில் சோதனை செய்து ஐபிஎல்-க்கு தயார்படுத்தியது.

இந்த நிலையில் ஐபிஎல் துவங்கிய நாளில் இருந்து ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வேகமாக குறைந்துள்ளது. இதுவரையில் எவ்விதமான கட்டணமும் இல்லாமல் ஜியோ சினிமா தளத்தை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஜியோ சினிமா தளத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற திட்டத்துடன், இதன் மூலம் வருவாய் பெற வேண்டும் என்ற திட்டத்துடன் இன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜியோ சினிமா தளத்திற்கு ஒரு பிரீமியம் சந்தா கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் முகேஷ் அம்பானி ஜியோ சினிமா-வின் இலவச சேவை பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
HBO மற்றும் Warner Bros போன்ற ஸ்டுடியோக்களில் இருந்து கன்டென்ட்-ஐ சமீபத்தில் ஜியோ சினிமா வாங்கிய நிலையில், இதை ஸ்ட்ரீம் செய்து பார்க்க வேண்டுமாயின் JioCinema தளத்திற்கு ஒரு வருடத்திற்கு ரூ 999 வசூலிக்கிறது. சந்தையில் இருக்கும் பிற சேவைகளை காட்டிலும் குறைவான கட்டணம் தான்.

இப்போதைக்கு ஜியோ சினிமா தளத்தில் HBO மற்றும் Warner Bros போன்ற பிராண்ட் கன்டென்ட் பார்க்க வேண்டும் என்றால் மட்டுமே பணம் செலுத்த வேண்டும். ஐபிஎல் தொடர்ந்து இலவசமாக பார்க்க அனுமதி அளிக்கப்படுகிறது, சில நாட்களுக்கு முன்பு ஜியோ சினிமா தளத்தில் ஹிந்தி விக்ரம் வேதா படம் இணைக்கப்பட்டது.
ரிலையன்ஸ் மீடியா மற்றும் கன்டென்ட் பிஸ்னஸ் பிரிவின் தலைவரான ஜோதி தேஷ்பாண்டே ஜியோசினிமா தளத்தில் 100 சினிமா மற்றும் டிவி சீரியஸ் வாங்கி இணைக்கப்பட உள்ளதாக ஏப்ரல் மாதம் அறிவித்தார்.


Click it and Unblock the Notifications