இந்தியாவின் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் தளமாக முகேஷ் அம்பானியின் ஜியோஹாட்ஸ்டார் உருவெடுத்துள்ளது. சுமார் 200 மில்லியனுக்கும் அதிகமான பிரீமியம் சந்தாதாரர்களைக் கொண்ட பெரிய நிறுவனமாக ஜியோ ஹாட்ஸ்டார் வளர்ந்துள்ளது. தற்போது நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோக்களை போலவே உலகின் 3-வது பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையாக ஜியோ ஹாட்ஸ்டார் உள்ளது.
இந்த விரைவான வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம் ஜியோ ஹாட்ஸ்டாரின் குறைந்த விலையிலான கட்டணம் தான். அதோடு பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் போட்டியைக் காண ரசிகர் பட்டாளங்கள் திரண்டு நிற்கும். இந்த முறை ஐபிஎல் தொடரை ஜியோ ஸ்டார் பல மொழிகளில் நேரடி ஒளிபரப்பு செய்து வருகிறது. இதுவும் ஜியோ ஹாட்ஸ்டார் உடன் மில்லியன் கணக்கான மக்கள் இணைய ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

"உலகின் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் சேவைகளில் ஒன்றாக ஜியோ ஹாட்ஸ்டார் உருவெடுத்துள்ளது. 200 மில்லியன் பயனர்கள் இணைந்துள்ளனர். இது எங்களுக்கு ஆத்ம திருப்தி அளிக்கிறது", என்று ஜியோ ஸ்டாரின் துணைத்தலைவரான உதய் சங்கர் கூறியுள்ளார்.
உலகளாவிய ஸ்ட்ரீமிங் நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று போட்டி போடும் நிலையில், உள்ளூர் ஜாம்பவானான ஜியோ ஹாட்ஸ்டாரும் தற்போது சேர்ந்து போட்டியில் ஈடுபடுகிறது. இனிவரும் காலங்களில் இது போன்ற OTT சேவைகளிடையே கடும் போட்டி நிலவும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ஜியோ ஹாட்ஸ்டாரின் இந்த வளர்ச்சிக்கு முக்கியமான காரணம் அதிக அளவிலான ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது தான். மற்ற தளங்கள் வெவ்வேறு உத்தியை பயன்படுத்தி செயல்பட்டு வரும் நிலையில் ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்போர்ட்ஸை மெயின் கன்டென்ட்டாக மாற்றி மக்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகிறது.
நெட்ஃபிளிக்ஸ், இந்தியாவில் அதிகம் பார்க்கப்படும் நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்துகிறது. அதே நேரத்தில் பிரேம் வீடியோ, ஆப்பிள் டிவி பிளஸ் மற்றும் பிற சேவைகளுடன் இணைந்து செயல்படுகிறது. ஜியோஹாட்ஸ்டார் வரும் நாட்களில் உலகளாவிய ஸ்ட்ரீமிங் தளங்களுடன் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னர் ஜியோ ஹாட்ஸ்டார் டொமைன் பிரச்சனை பெரும் பேசு பொருளாக இருந்தது. ஜியோவும், ஹாட்ஸ்டாரும் இணையப் போவதாக தெரிந்து கொண்ட டெல்லியைச் சேர்ந்த டெக்கி ஒருவர் இந்த டோமைனை வாங்கி வைத்திருந்தார். அதற்கு ரூ.1 கோடி விலை நிர்ணயம் செய்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு செய்தி அனுப்பினார். ஆனால் அதை ரிலையன்ஸ் நிறுவனமோ ஏற்க மறுத்தது.
இதனால் அந்த டேக்கி துபாயைச் சேர்ந்த ஜெயினம் மற்றும் ஜீவிகா என்ற இரண்டு குழந்தைகளுக்கு அந்த டொமைனை விற்பனை செய்தார். அதன் பிறகு ரிலையன்ஸ் நிறுவனம் இந்த இரண்டு குழந்தைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி டொமைனை திரும்பப் பெற்றது. அதற்கு இந்த இரண்டு குழந்தைகளும் எந்த ஒரு நிதியும் வாங்கவில்லை என்பது தான் ஹைலைட்.


Click it and Unblock the Notifications