ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணைந்து ஜியோஹாட்ஸ்டார் என்ற புதிய தளத்தை பிப்ரவரி 14 ஆம் தேதி அறிமுகப்படுத்தியுள்ளன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் வால்ட் டிஸ்னி இந்திய வர்த்தகம் இணைந்த நிலையில், இரு சாம்ராஜ்ஜியங்களின் ஸ்ட்ரீமிங் சேவைகள் இணைக்கப்பட்டது.
ஜியோசினிமா ஏற்கனவே பல பிரச்சனைகளை எதிர்கொண்டு இருந்த நிலையில், அதை மூடிவிட்டு லட்டு மாதிரி இயங்கும் ஹாட்ஸ்டாரை முகேஷ் அம்பானி கைப்பற்றியுள்ளார். தற்போது இவை இரண்டும் இணைந்து JioHotstar ஆக உருவெடுத்துள்ளது. இதன் மூலம் இரு தளத்திலும் இருக்கும் அனைத்து கண்டென்ட்களும் ஓரே இடத்தில் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட உள்ளது. இதில் முக்கியமாக ஐபிஎல் போட்டிகள் குறித்து முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது.

ஜியோஹாட்ஸ்டார் அறிமுகத்துடன், புதிய சப்ஸ்கிரிப்ஷன் மாடலையும் அறிமுகம் செய்துள்ளது. தற்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன் செய்துள்ளவர்கள் எந்தவித இடையூறும் அல்லது தற்போதைய விலை கட்டமைப்பில் தொடர்ந்து பயன்படுத்தலாம்.
புதிய சப்ஸ்கிரிப்ஷன் மாடலில், மொபைல் வெர்ஷனுக்கு ரூ. 149, "சூப்பர்" திட்டத்திற்கு ரூ. 299 மற்றும் விளம்பரம் இல்லாத "பிரீமியம்" திட்டத்திற்கு ரூ. 349 என மூன்று மாத காலத்திற்கு இக்கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதேபோல், ஜியோசினிமா பிரீமியம் பயனர்கள் தங்கள் தற்போதைய சப்ஸ்கிரிப்ஷன் காலத்தின் எஞ்சிய காலத்திற்கு ஜியோஹாட்ஸ்டார் பிரீமியத்திற்கு தானாகவே அப்கிரேட் செய்யப்படுவார்கள்.
ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, இனி ரசிகர்கள் சப்ஸ்கிரிப்ஷன் இல்லாமல் ஐபிஎல் போட்டிகளை பார்க்க முடியாது, ஆனால் லாக்இன் செய்யப்பட்டு போட்டிகள் துவங்கி சில நிமிடங்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்படும். ஜியோசினிமா-வில் 2023 ஆம் ஆண்டு முதல் இலவச ஐபிஎல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வந்தது. ஆனால் 2025 ஆம் ஆண்டு முதல், முழு போட்டியையும் பார்க்க ரசிகர்கள் சப்ஸ்கிரிப்ஷன் செலுத்த வேண்டும்.
இதை தாண்டி ஜியோஹாட்ஸ்டார்-ல் இப்போது என்.பி.சி யுனிவர்சல் பீகாக், வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி, HBO மற்றும் பாரமவுண்ட் போன்ற முக்கிய ஹாலிவுட் ஸ்டுடியோக்களின் திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் உட்பட பல்வேறு கண்டென்ட் சேர்க்கப்பட்டு உள்ளது, இது அனைத்தும் முன்பு ஜியோ சினிமா தளத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஸ்போர்ட்ஸ் பிரிவில் ஐபிஎல், டபிள்யூபிஎல் மற்றும் ஐசிசி போன்ற முக்கிய கிரிக்கெட் போட்டிகள், பிரீமியர் லீக், விம்பிள்டன், புரோ கபடி மற்றும் ஐஎஸ்எல் போன்ற சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளும் ஸ்ட்ரீமிங் செய்யப்படும்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications