இன்று 2026 டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதி போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தாலும், அரையிறுதி போட்டியில் இந்தியா-இங்கிலாந்து மோதல் உலக அளவில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது எத்தனை பேருக்கு தெரியும்.
ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் ஒரே நேரத்தில் 6.52 கோடி பேர் (65.2 மில்லியன்) அரையிறுதி போட்டியை பார்த்துள்ளனர். இது உலக வரலாற்றில் எந்த டிஜிட்டல் தளத்திலும் பதிவு செய்திடாத சாதனை அளவாகும்.

அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, மெக்சிகோ என உலகின் அனைத்து நாடுகளிலும் நடந்த விளையாட்டு போட்டிகள், இசை நிகழ்ச்சி என அனைத்திலும் ஒரே நேரத்தில் அதிகப்படியான பார்வையாளர் பெற்ற பட்டியலில் 2026 டி20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டி முதல் இடத்தை பிடித்துள்ளது.
இந்த சாதனை இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு இருக்கும் மிகப்பெரிய ஆர்வத்தையும், ஜியோஹாட்ஸ்டார் அணியின் தொழில்நுட்ப திறனையும் உலகுக்கு காட்டியுள்ளது.
இந்த அரையிறுதி போட்டி ஜியோஹாட்ஸ்டாரில் 62 கோடி (619 மில்லியன்) பார்வைகளை பெற்றது. மொத்தம் 10.1 பில்லியன் நிமிடங்கள் பார்வை நேரம் பதிவானது. இந்தியாவில் 3-ல் ஒரு பங்கு மக்கள் இந்த ஒரு போட்டியை பார்த்துள்ளனர். இது ஸ்பெயின், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகமானது.
உலகில் இதுவரை நடந்த டாப் 10 ஸ்ட்ரீம்களில் 9 போட்டிகளும் கிரிக்கெட் தொடர்பானவை, இவை அனைத்தும் ஜியோஹாட்ஸ்டாரில் நடந்துள்ளன மற்றொரு சிறப்பு. மேலும் இன்றைய இறுதி போட்டியில் இதுவரையில் ஜியோ ஹாட்ஸ்டாரில் 39.4 கோடி பேர் பார்த்து வருகின்றனர்.
மார்ச் 8 அன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நியூசிலாந்துடன் மோதி வருகிறது. இந்தப் போட்டியும் உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜியோஹாட்ஸ்டார் தளம் இதுவரை பல சாதனைகளை படைத்துள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தொழில்நுட்பம் உலக அளவில் முன்னோடியாக திகழ்கிறது. இந்த சாதனை இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெருமையை அளிக்கிறது.


Click it and Unblock the Notifications