இந்தியாவில் AI புரட்சிக்கு தயாராகும் அம்பானி! ஜியோ கணினி , ஸ்மார்ட் கண்ணாடி அறிமுகம் செய்து அதிரடி!

மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் கீழ் பெட்ரோ கெமிக்கல், சில்லறை வர்த்தகம், தொலைதொடர்பு சேவை, நிதி சார்ந்த சேவைகள் என பல நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.

முகேஷ் அம்பானி: ரிலையன்ஸ் நிறுவனத்தின் 48வது ஆண்டு பொது குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி கலந்து கொண்டு பல முக்கியமான விஷயங்களை பேசினார். குறிப்பாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஏஐ சம்பந்தப்பட்ட திட்டங்களை அவர் விவரமாக வெளியிட்டிருக்கிறார்.

இந்தியாவில் AI புரட்சிக்கு தயாராகும் அம்பானி! ஜியோ கணினி , ஸ்மார்ட் கண்ணாடி அறிமுகம் செய்து அதிரடி!

ஏஐ புரட்சி: உலக அளவில் தற்போது ஏஐ தொழில்நுட்பம் தான் பெருமளவில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது. இந்தியாவில் தொலைதொடர்பு சேவையில் ஜியோ மூலம் பெரிய புரட்சியை கொண்டு வந்த ரிலையன்ஸ் நிறுவனம் அடுத்த கட்டமாக ஏஐ துறையிலும் பெரிய ஒரு புரட்சியை கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறது . இந்த கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி இந்தியா வெளிநாட்டை சேர்ந்த எந்த ஒரு மாடலையும் பின்பற்ற தேவையில்லை இந்தியா தன்னுடைய வளர்ச்சிக்கு சொந்தமான மாடலை வைத்திருக்கிறது எனக் கூறினார்.

ஏஐ ஒரு காமதேனு: ஏஐ தொழில்நுட்பத்தை காமதேனு பசுவுடன் ஒப்பிட்டு பேசினார் . இந்து மத நம்பிக்கையின் படி காமதேனு என்பது கேட்பதை எல்லாம் கொடுக்கக்கூடிய சக்தி வாய்ந்த ஒரு பசு. தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல்வேறு துறைகளின் செயல் திறனையும் மேம்படுத்தி இருக்கிறது , எதிர்பார்க்காத பல விஷயங்களில் மனிதர்களை கால் பதிக்க வைத்திருக்கிறது இந்த ஏஐ-இன் சக்தியை நாம் காமதேனு பசுவோடு ஒப்பிடலாம் என தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் AI புரட்சிக்கு தயாராகும் அம்பானி! ஜியோ கணினி , ஸ்மார்ட் கண்ணாடி அறிமுகம் செய்து அதிரடி!

ஏஐ கட்டமைப்பு: இந்தியாவில் ஏஐ தொழில்நுட்பத்தில் பெரிய ஒரு புரட்சியை கொண்டுவர ரிலையன்ஸ் நிறுவனம் தயாராகி வருவதாக கூறிய அவர் ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ் என்ற பெயரில் இதற்காகவே ஒரு தனி நிறுவனத்தை தொடங்குவதாக கூறியிருக்கிறார். மெடா மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்களோடு ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். அனைத்து இந்திய வீடுகளிலும் அடுத்த தலைமுறை ஏஐ உள்கட்டமைப்பை கொண்டு வருவதே எங்களின் நோக்கம் என கூறினார்.

கூகுள்,மெடாவுடன் ஒப்பந்தம்: அனைவருக்கும் ஏஐ எங்கும் ஏஐ என்பது தான் எங்களின் இலக்கு என தெரிவித்த அவர் உலகின் பல்வேறு முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களோடு இதற்காக கைகோர்த்து இருப்பதாகவும் இந்தியாவை சேர்ந்த சிறு தொழில்கள் தொடங்கி வாடிக்கையாளர்கள் வரை அனைவரிடமும் ஏஐ தொழில்நுட்பத்தை சென்று சேர்ப்பதில் ரிலையன்ஸ் முக்கிய பங்கு வகிக்க போகிறது என குறிப்பிட்டார்.

ஜியோ கண்ணாடி: இந்த கூட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ ப்ரேம்ஸ் என்ற ஏஐ அடிப்படையிலான ஒரு ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகம் செய்திருக்கிறது. நம்முடைய குரல் கட்டளைக்கு ஏற்ப இந்த ஸ்மார்ட் கண்ணாடி செயல்படும் ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அதேபோல ஜியோ பிசி என்ற ஒரு ஸ்மார்ட் கம்ப்யூட்டர் அமைப்பையும் ரிலையன்ஸ் நிறுவனம் கொண்டு வந்திருக்கிறது. எந்த ஒரு டிவியையும் லேப்டாப்பையும் ஒரு ஸ்மார்ட்டான கருவியாக இது மாற்றும் திறன் கொண்டதாக இருக்கும் என அறிவித்துள்ளது.

ரியா வாய்ஸ் அசிஸ்டெண்ட்: அதே போல ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் ரியா என்ற குரல் கட்டளைகளுக்கு பதில் அளிக்கும் திறன் கொண்ட ஒரு ஏஐ வசதியை கொண்டு வந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 2025 ஆம் நிதியாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் லாபம் 80,787 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்திய கருவூலத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பாளராக ரிலையன்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. 2025ஆம் நிதியாண்டில் ரிலையன்ஸின் பங்களிப்பு 2.10 லட்சம் கோடி ரூபாய் ஆகும். கடந்த 6 ஆண்டுகளில் 10 லட்சம் கோடி ரூபாய் வரை ரிலையன்ஸ் நிறுவனம் இந்திய கருவூலத்திற்கு தந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+