ஜியோ போனுக்கு ஏகபோக வரவேற்பு.. ரிலையன்ஸ் ரீடைல் செம ஹேப்பி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் 2ஜி சேவை பிரிவில் இருக்கும் வாடிக்கையாளர்களை 4ஜி சேவைக்குக் கொண்டு வரவும், தனது வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் கூகுள் இணைந்து தயாரித்த ஜியோ போன் நெக்ஸ்ட் தீபாவளி பண்டிகையின் போது அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தப் போன் அறிமுகம் செய்யப்படும் முன்பு சந்தையில் கலவையான விமர்சனங்கள் இருந்த நிலையில் அறிமுகத்திற்குப் பின்பு இதன் உண்மையான நிலையை ரிலையன்ஸ் ரீடைல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

10 ஆண்டுகளில் 4 மடங்கு கடனில் மூழ்கிய அரசு போக்குவரத்து கழகம்.. ஆர்டிஐ-ல் அம்பலம்..! 10 ஆண்டுகளில் 4 மடங்கு கடனில் மூழ்கிய அரசு போக்குவரத்து கழகம்.. ஆர்டிஐ-ல் அம்பலம்..!

 ஜியோபோன் நெக்ஸ்ட்

ஜியோபோன் நெக்ஸ்ட்

ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் போது ரிலையன்ஸ் ரீடைல், இந்திய சந்தையில் வெறும் 1999 ரூபாய் விலையில் அதிகப்படியான சேவைகள் கொண்ட போன் இல்லை. இந்தப் போன் பல கோடி வாடிக்கையாளர்களைக் கட்டாயம் ஈர்க்கும் என அறிவித்தது.

 ரிலையன்ஸ் ரீடைல்

ரிலையன்ஸ் ரீடைல்

இந்நிலையில் அறிமுகத்திற்குப் பின்பு ரிலையன்ஸ் ரீடைல் இந்தியாவின் பெரு நகரங்கள் முதல் கிராமங்கள் வரையில் இருக்கும் வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மத்தியில் மிகவும் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

உண்மையில் ஜியோபோன் நெக்ஸ்ட் எப்படி இருக்கு..? மக்களாகிய உங்கள் கருத்து மிகவும் முக்கியம் என்பதால் தவறாமல் கருத்தை கமெண்ட் பண்ணுங்க.

 ஜியோ வாடிக்கையாளர்கள்

ஜியோ வாடிக்கையாளர்கள்

இந்தப் போன் ஜியோ சிம் உடன் வரும் காரணத்தால் ஜியோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை விரைவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் விற்பனையாளர்கள் தற்போது வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆர்டர்களைப் பெற்று வரும் நிலையில் விரைவில் டெலிவரி துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஜியோ போன் நெக்ஸ்ட் விலை

ஜியோ போன் நெக்ஸ்ட் விலை

ஜியோ போன் நெக்ஸ்ட்-ஐ மொத்தமாக 6,499 ரூபாய் கொடுத்து வாங்கலாம் அல்லது 1999 ரூபாய் ஆரம்பக்கட்ட விலையில் 18/24 மாத ஈஎம்ஐ கீழ் 4 திட்டத்தில் இந்தப் போன் தற்போது சந்தையில் கிடைக்கிறது. மேலும் ஈஎம்ஐ மூலம் போனை வாங்குபவர்கள் 501 ரூபாய் பிராசசிங் கட்டணம் செலுத்த வேண்டும்.

 4 ஈஎம்ஐ திட்டம்

4 ஈஎம்ஐ திட்டம்

Always-on திட்டம் - 24 மாதத்திற்கு 300 ரூபாய், 18 மாதத்திற்கு 350 ரூபாய் ஈஎம்ஐ. இதற்கு மாதம் 5ஜிபி இண்டர்நெட் டேட்டா, 100 நிமிடம் வாய்ஸ் கால் சேவையும் கிடைக்கும்.

Large திட்டம் - 24 மாதத்திற்கு 450 ரூபாய், 18 மாதத்திற்கு 500 ரூபாய் ஈஎம்ஐ. தினமும் 1.5ஜிபி இண்டர்நெட் டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் சேவையும் கிடைக்கும்.

XL திட்டம் - 24 மாதத்திற்கு 500 ரூபாய், 18 மாதத்திற்கு 550 ரூபாய் ஈஎம்ஐ. தினமும் 2ஜிபி இண்டர்நெட் டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் சேவையும் கிடைக்கும்.

XXL திட்டம் - 24 மாதத்திற்கு 550 ரூபாய், 18 மாதத்திற்கு 600 ரூபாய் ஈஎம்ஐ. தினமும் 2.5ஜிபி இண்டர்நெட் டேட்டா,அன்லிமிடெட் வாய்ஸ் கால் சேவையும் கிடைக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

JioPhone Next gets extremely encouraging response says Reliance Retail

JioPhone Next gets extremely encouraging response says Reliance Retail
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X